Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 12 ஜனவரி, 2015

தூய்மை லெப்பைக்குடிக்காடு (நமதூர்) ?


நமதூர் கிழக்கு மெயின் ரோட்டிலே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாக்கடை சுத்தம் செய்யப்பட்டது. நமது பேரூராட்சி நமக்கு ஒரு வகையில்
நன்மைகள் செய்தாலும் அது சில சமயங்களில் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது என்று சென்னால் அது மிகையல்ல. இந்த பகுதியில் வாகனம் அதிகமாக செல்வதால் இந்த சாக்கடையிலிருந்து எடுத்த கழிவு சாலையின் பாதி பகுதியைஆக்கிரமித்துள்ளது. இதனால் நமதூர் மற்றும் வெளியூர் மக்கள் மிகவும் சிறமத்திற்கு ஆளாகின்றனர். இதை உரிய முறையில் விரைவாக அப்புரப்படுத்த வேண்டும் என நமதூர் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.






நமது நிருபர்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
    தொடர்ந்து நம்ம ஊர் முன்னேற்றத்திற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து துபாயில் உள்ள எங்களை போன்ற மக்களுக்கு நமது ஊர் செய்தியை தெரிய படுத்தும் இந்த வெப்சைட் ஊரில் உள்ள அனைத்து வெப்சைட்டுகளுக்கு ஓர் முன்மாதியாக உள்ளது.

    பதிலளிநீக்கு