Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 21 ஜனவரி, 2015

ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் மற்றும் விசிட் விசா கட்டணம் உயர்வு!!


துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் மற்றும் விசிட் விசாவின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 நாட்கள் மற்றும் 30 நாட்கள் நீட்டிப்பு வசதியையும் ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை 2015 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட , ஒரு முறை மட்டும் உள் நுழைவதற்கான டூரிஸ்ட் விசாவின் (Tourist Visa – Single Entry – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 250, இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 210. 

முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட பல முறை உள் நுழைவதற்கான டூரிஸ்ட் விசாவின் (Tourist Visa – Single Entry – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 350. விசிட் விசாவின் கட்டணமும் அதிகரித்துள்ளதாகவும், அதன்படி முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட விசிட் விசாவின் (Visit Visa – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 350 எனவும் இதற்கு திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை (Refundable Deposit) செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாவில் கால நீட்டிப்பு வசதி இல்லை (Non-Extendable) எனவும் தெரிவிக்கப்படுள்ளது.  இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 300. 

அதேபோல தொண்ணூறு நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட விசிட் விசாவின் (Visit Visa – 90 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 790 எனவும் இதற்கும் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை (Refundable Deposit) செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாவிலும் கால நீட்டிப்பு வசதி இல்லை (Non-Extendable) எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 660 எனப்து குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக