Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 27 ஜனவரி, 2015

நமதூரில் காணப்பெற்ற சுவரொட்டி ....


24/01/15 இன்று இந்திய தேசிய லீக் கட்சி
பெரம்பலூர் மாவட்டம் சார்பாக
ஜனவரி 28 ஜனாஸா ஏந்தி போராட்டம் போஸ்டர்கள்...

அநீதியால் 19 உயிர்களை இழந்த எம் சமுதாயம்,
நீதி கிடைக்காமல், அநீதியை எதிர்த்து போராடியதால், சிறை கம்பிகளுக்குப் பின்னால்   அடைக்கப்பட்டு சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது.
இந்த 19 ஆண்டுகாலமாக சிறையில் எம் சகோதரர்கள் பட்ட என்னிலடங்கா கஸ்டங்கள், அவர்களின் குடும்பத்தார் பட்ட துயரங்கள் நினைத்து பார்த்தால்
கண்கள் கூட கண்ணீர் வடிக்கும்..
இந்த அரசும், காவல்துறையும் எம் சகோதர, சகோதரிகளின் கண்ணீரை பொறுட்படுத்தாமல் அலட்சியமாக விடுதலை செய்யாமல் இருக்கிறது
இந்த 19 ஆண்டுகால சிறை வாழ்க்கையில்.
இரண்டு உயிர்களை பறிகொடுத்தோம்,
இன்னும் இரண்டு உயிர்களை பறிகொடுக்கும் நிலையில் இருக்கின்றோம்
இந்த நிலை மற்ற சிறைவாசிகளுக்கும் தொடராமல் இருக்க 10 மற்றும் 19 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் எம் சகோதரர்களை கொன்று உடலை ( ஜனாஸா ) ஒப்படைக்ககோரி
பழனி பாபா ஷஹிதாக்கப்பட்ட நாளான ஜனவரி 28 ல்
... சட்ட மன்றத்தை நோக்கி...
ஜனாஸா ஏந்திய போராட்டத்திற்கு
சமுதாயமே அணிதிரண்டு வாருங்கள்....

மின்னஞ்சல் மூலமாக
Stjameer Lbk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக