Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

ஒபாமா சுவாசிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வருகிறதா காற்று?

டெல்லி: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வருகையையொட்டி, அமெரிக்க பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே டெல்லி வந்து அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்படி ஆய்வு செய்த அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு சுவாசப்பிரச்சினை, இருமல் போன்ற சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், டெல்லியில் காற்று மாசு அதிகம் இருப்பதாக அவர்கள் கருதியதால், ஒபாமாவுக்காக அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு சுத்தமான காற்றை கொண்டு வர அந்த நாட்டு உயர் அதிகாரிகள் தீர்மானித்தனர்.
அதன்படி, அமெரிக்க போர்க்கப்பல் மூலம் 20 ஆயிரம் கேலன் (ஒரு கேலன் சுமார் 3¾ லிட்டர்) சுத்தமான காற்றை மும்பைக்கு கொண்டு வந்து, பின்னர் அதை மிகுந்த பாதுகாப்புடன் அங்கிருந்து டேங்கர்கள் மூலம் டெல்லி கொண்டு வர தீர்மானித்தனர்.
நாளை (திங்கட்கிழமை) டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒபாமா உள்ளிட்ட மிகமிக முக்கிய பிரமுகர்கள் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட கண்ணாடி கூண்டு மேடையில் அமர்ந்தபடி பார்வையிடும் போது, காற்று மாசு காரணமாக ஒபாமாவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அமெரிக்காவில் இருந்த கொண்டு வரப்பட்ட சுத்தமான காற்றை அந்த கண்ணாடி கூண்டுக்குள் செலுத்த அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்து இருந்தனர்.
அவர்கள் இதுபற்றி இந்திய அதிகாரிகளிடம் கூறியபோது, இந்த திட்டத்தால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அமெரிக்க அதிகாரிகளின் யோசனையை இந்திய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக