Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு- 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல்



சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடப்பாண்டிற்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று தேர்வாணைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த கல்வி ஆண்டில் 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நடப்பாண்டில் மாவட்ட கல்வித் துறை அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள், குரூப் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். இதற்கான தேர்வுக் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது"என்று தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலமாக 
பாஷா ஹாஜா மெய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக