Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வெற்றிடம் நிரப்ப வீறு கொண்டு எழுவோம்!

2016-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் இப்பவே பல்வேறு வியூகங்கள் வகுத்து வரும் இவ்வேளையில்… பல்வேறு கட்சிகளாகவும்,அமைப்புகளாகவும் தனித்தனி தளங்களில் செயல்பட்டுவரும் நமது சமுதாய இயக்கங்கள் இன்னும் வாய் மூடி வாழா வெட்டியாய் இருப்பது சரியா?

24 அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் சகோதரர் அப்பல்லோ ஹனீபா  அவர்களின் தலைமையில், அமைப்பில் சேராதவர்களையும் இணைத்துக்கொண்டு அதற்கான களப்பணியை இப்போதே துவக்கலாமே?
அதை எப்படி துவக்குவது? எங்கே துவக்குவது?எந்த மாதிரி துவக்குவது? யாரை முன்னிலை படுத்தி துவக்குவது? என்ற ஈகோயிச கேள்விக்குள் அமுங்கி நமது அரசியல் விழிப்புணர்வை குழி தோண்டி புதைத்து விடாமல் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்தி அவனது பெயரை முன்மொழிந்து ஓரிடத்தில் அமர்ந்து பேசுங்கள்.
ஷஹீத் பழனி பாபா மற்றும் சமூக சிந்தனைமிக்கோரின் கருத்திற்கிணங்க முஸ்லிம்,தலித் சமூக மக்களின் பெருவாரியான வாக்கு வங்கியுள்ள 60 தொகுதிகளை இனம் கண்டு அதில் கூடுதல் கவனம் செலுத்தி நமது கூட்டமைப்பின் சார்பில் குறைந்தபட்சம் 60 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன்  கூட்டணி என்ற கொள்கையை பாஜக தவிர்த்து இன்னபிற பெரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கலாமே?
நமது கோரிக்கையை செவிமடுக்காத கட்சிகளை ஓரம் கட்டிவிட்டு, தொல்.திருமாவளவன் போன்ற களப் போராளிகளுடன் தனி அணி அமைத்தும் களம் காணும் முயற்சியை முன்னெடுக்கலாமே?
60 தொகுதிகள் ஒதுக்குவார்களா? என்ற அவநம்பிக்கை நமக்கு வேண்டாம். முதலில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டி அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து அதை மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் அதன் பிறகு என்ன மாதிரியான முன்னேற்றம் தென்படுகிறது என்பதை யூகிக்கலாம்.
ஒருவேளை 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால்…யார்,யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பிணக்குகள் வருமே?என்று யோசிக்க வேண்டாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 10, மனித நேய மக்கள் கட்சி 10, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 10 என்ற வகையில் தொகுதிகளை பிரித்து விட்டு மீதமுள்ள 30 தொகுதிகளை மற்ற அமைப்புகளுக்கு பிரித்து கொடுக்கலாமே?
தொகுதி எண்ணிக்கை பங்கீட்டில் சுமூகம் ஏற்பட்டு எந்தெந்த தொகுதி யார்,யாருக்கு என்ற குழப்பம் வருமே என்று யோசிக்க வேண்டாம்? அதற்கும் அழகிய தீர்வு உண்டு.
இன்ஷா அல்லாஹ்…இனிவரும் காலத்தில் எழுதுகிறேன்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக