Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 7 பிப்ரவரி, 2015

நபிவழி சட்டம் பிரகடனம்

நபிவழி சட்டம் பிரகடனம்
இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
புதிய மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!!

சவூதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்....
யாரும் எனது ஆட்சியில் அநியாயத்தக்கு உட்படுத்தப்படுவதையும் அதனால் இறைவனுக்கு முன்னால் நான் குற்றவாளியாக மாறுவதையும் நான் விரும்பவில்லை.
நான் வாழும் இந்த காலத்தில் எனது ஆட்சியின் கீழ் உள்ள குடிமக்கள் பாதிக்கப்பட்டால் எந்த துணையும் இல்லாமல் அவர் என்னை அணுகலாம், என்னிடம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையிடலாம் அவருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும்.
அப்படி முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எமது அரசி்ன் இணையதளத்தின் மூலமோ தமது புகாரை எமக்கு தெரியப்படுத்தலாம் அல்லது தபால் நிலையங்கள் மூலமாக எந்த கட்டணமும் இல்லாமல் தமது புகார்களை எனக்கு அனுப்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
அப்படி அனுப்பப்படும் புகார்கள் எனது பிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் எனது குடும்பத்திற்கு எதிராக இருந்தாலும் எனது பேரபிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் அவைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதி நியாயத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கபடும் என்றும் அவர் அறிவித்திருப்பது பலரையும் கவர்ந்திருக்கிறது.
நன்றி: arab news, முகநூல் முஸ்லிம் மீடியா பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக