Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 16 பிப்ரவரி, 2015

மக்கள் விரும்புவது மாற்றா? மாற்றமா?

உலகிலேயே மிகப்பெரிய மதசார்பற்ற நாடு இந்தியா என்ற அடையாளத்துக்கு சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் கடந்துவிட்டது. சமீப காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அந்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் ஒரு கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு தினம் தினம் சர்ச்சைகள், பிரச்சனைகள் என்று ஸ்திரத்தன்மை இல்லாமல் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல்
இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு இரண்டு காரணிகள். ஒன்று காங்கிரஸ் மீது மக்களிடம் இருந்த எதிர்ப்பு, மற்றொன்று பிஜேபி போடோஷோப் என்ற மென்பொருள் மூலம் முன்வைத்த வளர்ச்சி என்ற கோஷம். இதன் மூலம் பிஜேபி அசுர பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.
நடைமுறையில் கடந்த பத்து மாதத்தில் அவர்கள் காட்டிய வளர்ச்சி என்பது இந்துத்துவ சக்திகளின் வளர்ச்சி மட்டும் தான் என்பதை உணர்ந்ததன் விளைவு தான் பிப்ரவரி 10 அன்று வெளியான டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சியை மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது.
காங்கிரஸை மக்கள் வெறுக்க பத்து ஆண்டுகள் ஆனது ஆனால் பிஜேபி-யை மக்கள் வெறுக்க பத்து மாதங்களே மக்களுக்கு தேவைப்பட்டுள்ளது என்ற பல அரசியல் விமர்சகர்களின் கூற்றிலிருந்து மக்கள் மாற்றத்தை தான் எதிர்பார்கிறார்களே தவிர மாற்றை அல்ல என்பது இந்த தேர்தலின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
1989-ம் வருடம் சிக்கிம் மாநிலத்தில் இதேபோன்றதொரு மாற்றம் உருவாகி மிருக பலத்துடன் சிக்கிம் சங்கிரம் பரிஷத் கட்சியை ஆட்சியில் அமர்த்தியது, அப்போது அதை யாரும் இதை மத்திய அரசு மீதான மதிப்பீடு என்று கூறவில்லை. ஆனால் டெல்லி தேர்தலை மத்திய அரசு மீதான மதிப்பீடு என்று கூறுவதற்க்கு காரணிகள் உண்டு, டெல்லி இந்தியாவின் தலைநகர், அரசு அறிவிக்கக்கூடிய திட்டங்கள் அனைத்தும் அங்கிருந்து தான் ஆரம்பம் ஆகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதுக்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் ஒரு பிரதமர் என்று அரசு இயந்திரமே அங்கு நிவாரன வேலைகளை செய்வது போல் முடுக்கிவிடபட்டிருந்தனர், போன்ற பல காரணிகளை கூற முடியும்.
மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை விடுத்து இந்துத்துவ கொள்கைகளை அமுல்படுத்துவதில் தீவிரம் கட்டியதால் இந்த பிரம்மாண்ட தோல்வியை பிஜேபி-க்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இதன் மூலம் மக்கள் இந்துத்துவ சக்திகளின் வகுப்புவாத பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை முற்றிலும் நிராகரித்துள்ளார்கள் என்பது தான் இன்று நிதர்சனமான உண்மை. மேலும் இது மோடியின் மௌனதுக்கு மக்கள் அளித்த பதில் என்பதிலும் இருவேறு கருத்துக்கள் கூற முடியாது.
வெறுப்பு அரசியலை விடுத்து போராட்ட அரசியலை முனெடுப்பவர்களுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு பெருகிவருவதை டெல்லி தேர்தல் முடிவுகள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதன் மூலம் இந்தியா மதசார்பற்ற, ஜனநாயக நாடு என்ற அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்ற செய்தியையும் கூறியுள்ளது, இது மதசார்பற்ற சக்திகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
வளர்ச்சி என்பது போடோஷோப் மூலம் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க முடியாது மாறாக வளர்ச்சி என்பது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் சுமூகமான சூழல் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அனைத்து சமூக மக்களும் ஒன்றாக கரம் கோர்த்து முன்னேறும் போது தான் அது சாத்தியப்படும் என்பதையும் ஆளும் வர்க்கங்கள் மனத்தில் நிறுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஒட்டுக்கள் 70 சதவீதத்துக்கும் மேல் ஆம் ஆத்மிக்கு விழுந்திருக்கிறது. இது நமக்கு ஒரு செய்தியை உரக்க சொல்கின்றது, தலித்துக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள், மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவதன் மூலம் இந்தியாவை வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது, மேலும் மதவாத பிஜேபி-யை மட்டுமல்லாமல் ஃபாஸிச வந்தேறிகளை முற்றிலும் துடைத்தெறிய முடியும் என்பது தான் அது.
அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள சாமானியர்களின் எதிர்பார்ப்பு முழுமையடைய பொருத்திருந்து பார்ப்போம்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக