Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பலனளிக்குமா மோடி அணியும் மதச்சார்பின்மை முகமூடி?

“எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை எனது அரசு அனுமதிக்காது” என்று நமது பிரதமர் மோடி அவர்கள் ஒரு சிறுபான்மை அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இதை எந்த ஒரு ஒற்றுமையையும் அமைதியையும் விரும்பும் சாமானிய இந்தியனும் வரவேற்பான், நாமும் வரவேற்போம்.
தன்னை ஒரு இந்துத்துவ பாசறையில் இருந்து வந்தவன் என்று பெருமையாக கூறும் மோடியிடம்
இருந்து இது போன்ற வார்த்தைகள் வருவதற்க்கு காரணிகள் உண்டு, அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வருகையின் போது “இந்தியாவின் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிறது” என்று கூறிவிட்டு சென்றார், அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா சென்ற பிறகும் “காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவின் மதச்சார்பின்மையை பற்றி அதிர்ச்சி ஆகியிருப்பார்” என்று தனது உச்சபட்ச எதிர்ப்பை தெரிவித்தார். பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மதவெறி உதவாது என்று உலக நாட்டாமை அறிவுரை கூறியிருப்பார் போலும்!மேலும் டெல்லி தேர்தல் முடிவுகள், இந்துத்துவ கொள்கையை மக்கள் முற்றிலும் புறக்கணித்திருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பதையும், காரணிகளாக கூறலாம்.
பொதுவுடைமை, மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் நமது அரசியல் சாசனத்தின் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கும் சொற்கள். இதை நீக்க வேண்டும், அதை நியாயப்படுத்தும் நோக்கத்தில் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுவது போன்ற சர்சைகளுக்குரிய கருத்துக்களை பிஜேபி-யின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், தொண்டர்கள் வரை பேசும் போதும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தளங்கள் தாக்கபடும்போதும் மோடி தனது வரலாற்று சிறப்பு மிக்க மவுனம் மூலம் நானும் இதற்க்கு உடன்படுகிறேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்போது தனது மவுனத்தை கலைத்துவிட்டு இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்கும் என்று கூறியிருப்பது மதில் மேல் உள்ள பூனையாகத்தான் மோடி உள்ளார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஏனென்றால் இந்துத்துவ பரிவாரங்கள் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை அனுமதிக்காது என்பது அவர்களின் முந்தைய வரலாறுகள் நமக்கு உணர்த்தும் செய்தி.
இதன் மூலம் மோடி சாதிக்க நினைப்பது என்ன? மோடியால் இது சாத்தியப்படுமா? என்பன  போன்ற நியாயமான பல கேள்விகள் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் எழுகிறது. ஒருபுறம் வளர்ச்சி என்ற முகமூடி கிழிந்து தொங்குகிறது, மறுபுறம் வெறுப்பு அரசியலை இனிமேலும் நம்பியிருந்தால் எல்லா மாநிலங்களிலும், பிரம்மாண்டமான தோல்விகளை பரிசாக அளிப்பதற்கு மக்கள்  தயாராக இருக்கிறார்கள். இதனால் தான் மோடியும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியலை கையில் எடுத்துள்ளார் என்பது பல சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
அவர் உண்மையிலேயே உளப்பூர்வமாக அவ்வாறு கூறி இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய செயல்கள் செய்யும், பேச்சுக்கள் பேசும் அவரது அமைச்சரவை சகாக்களிடமிருந்து ஆரம்பிக்கட்டும். அப்போது தான் அவர் கூறிய வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்ப்பது யானை தன் தலையில் மண்ணை வாரி போடுவதற்கு சமம் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் தான் நடந்தேருகிறது, குஜராத் கலவரத்திற்கு காரணமான சங்கபரிவார கூட்டங்கள் இன்று விடுதலையாகிறார்கள், போலி என்கௌண்டெர் புகழ் மோடியின் சகாக்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது மோடி பதுங்குகிறார்! மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இந்துத்துவ சக்திகளை தனிமைப்படுத்தி இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும்!!
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக