Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 9 பிப்ரவரி, 2015

நமதூரின் இயக்கமும்! இணக்கமும்!!

இடையில் வந்த வெறியும் மரணம் கொடுக்கும் அடியும்…,


உண்மைக்கு உயிரோட்டம் கொடுக்கக் கூடிய எங்களுடைய இந்த வார்த்தை நமதூர் ஜமாத் பெருமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் முடிவையும் நேர்வழியையும் இறைவனிடமே ஒப்படைத்தவனாக மனதை கல்லாக்கிக்கொண்டு வரும் வார்த்தை பதியப்படுகிறது.
  • பீடி சிகிரெட் அடிப்பவர்களுக்கு பள்ளியில் மிக்பெரிய பெறுப்பில் இடம் உண்டு
  • திருடுபவன் கொல்லை அடிப்பவனுக்கு தலைவர் பதவிக்கு இடம் உண்டு
  • வட்டி தொழில், மற்றும் கட்டபஞ்சாயத்து பேசி ஊர்ரார் காசை திருடி தின்பவனு்க்கு இனியும் முன்னுறிமை கொடுக்கப்படுகிறது.

நீங்கள் வருடா வருடம் ரமலானுக்கு கஞ்சியையும், பெரிய கந்துரி மற்றும் சிறிய கந்துரி நடத்தி விடுவதினால் உங்கள் பாவங்கள் என்ன கழுவப்பட்டு விடுமா? இந்த கேள்வியை நாங்கள் கேட்கவில்லை என்றால் என்றாவது ஓர் நாள் எங்களின் வாரிசுகள் எங்கள் சட்டையைபிடித்து கேட்கும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை!

காபிர்களின் மரண செய்தியை பள்ளியில் அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. அதில் தவறில்லை, அது நம்முடைய சகோதரத்துவத்தை காட்டும். ஆனால் பிறப்பாளும் இறப்பாளும் முஸ்லிமான ஒருவர், நமக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணங்களினால் வேறு ஜமாத்திற்கு செல்ல நேர்ந்தது. இப்படி இருந்தும் அவர் தனது வாழ்வில் தவ்ஹித் கொள்கையை ஏற்று ஓரே இறை ஓரே மறை என்ற அடிப்படையில் வாழ்ந்த மனிதர் மரணச்செய்தியை பள்ளியில் அறிவிப்பு செய்யாமல் உங்களுக்கு தடுத்தது எது?

இப்பொழுது சொல்லுங்கள் அவர்களுடைய ஈமானை குரோதம் என்ற கொடிய விலங்கு ஆட்கொண்டுள்ளது என்று!

இதன் முடிவு எங்கு கொண்டு சேர்க்கும் என்று உங்களால் என்னிப்பார்க இயலுமா? அப்படி முடிந்தால் இது போன்ற போலி கவுரவத்தை விட்டு ஜமாத் என்னும் பாராமல், இயக்கம் என்று பாராமல், கட்சி என்று பாராமல் நம்முடை சகோதரன் என்ற அடிப்படையில் அல்லவா ஓன்றினைய கடமை பட்டவர்களாக இருக்க வேண்டும்! நாம் இருந்த இடம் அடயாலம் தெரியாமல் ஆகி விடக்கூடாது சகோதரர்களே! நாளைய வாரிசுகள் நம்மை நயவஞ்சகர்கள் என்று நம் நற்பெயரை களங்கம் ஏற்படுத்தி வைத்து விடும்.

மையத்து அடக்கும் இடத்தில் பிரச்சணை செய்பவன், நாளை மறுமையிளோ அல்லது இந்த உலகத்திலோ இதற்கான பலனை அனுபவிக்காமல் சுவனம் நுழையமுடியாது என்பது மார்க்கத்தை சிந்தித்து உணரக்கூடியவர்களுக்கு, நம்முடைய ஈருலகச்சிந்தணை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இதை இறையச்சம் கொண்ட எவராலும் மறுக்க முடியாது.

விட்டுக் கொடுத்தால் வீழமாட்டோம் என்பது வரலாறு நமக்கு வழியுணர்த்த வில்லையா?
  • மையத்து அடக்கம் சம்மந்தமாக நமக்குள் அழகிய ஒப்பந்தம் இல்லாமல் இதற்கான தீர்வு நமக்கு கிடைக்காது.
  • அன்னிய சமுதாயத்தை இது சம்மந்தமாக உதவிக்கு தேடுவது அநாகரிகமான செயல்.
  • உங்களுடைய ஈமானுக்கு குந்தகம் விளைவிப்பதாக நீங்கள் கருதினால் அதற்கான தீர்வை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுங்கள்.
  • ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள். இது ஒரு போது நமக்கு நம் தூதர் முஹம்மது ஸல் (அலை) அவர்கள் கற்று கொடுத்ததே இல்லை!
  • அழகிய ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள் அதுவே நமது சகோதரத்துவத்தை மிளிச்செய்யும்.

எந்த ஒரு சமுதாயமும் தங்களை தாங்களே திருத்திக் கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை திருத்த மாட்டான். அந்த சமுதாயத்தை அழித்து விட்டு அதற்கு பகரமாக ஓர் புதிய சமுதாயத்தை உருவாக்குவான்.
அல் குர்ஆன்

ஒற்றுமை மற்றும் சமுதாய அக்கரை கொண்டு வெளியிடுவது
Labbaikudikanu News
நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக