Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 19 பிப்ரவரி, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!


பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.


இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ககோதரர் முஹம்மது யூனுஸ் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இடம் பேரூந்து நிலையம் மற்றும் கிழக்கு பிலால் பள்ளி வாசல் அருகில்.



மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக