Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 பிப்ரவரி, 2015

மோடி அரசை கண்டித்து தேச ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது!


thesa otrumai

மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துகின்ற குழுக்களை கண்டித்தும் அந்த குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்
தேவாலயங்களும், மசூதிகளும் தொடர் தாக்குதலுக்கு உள்ளான போதும் கூட மத்தியில் அமைந்திருக்கும் அரசு செயல்படாமல் இருப்பதை கண்டித்தும்
அனைத்துச் சமுதாய மக்களும் அமைதியாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தியும்

தேச ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக  வருகின்ற 28.02.2015 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் உள்ளிட்ட பல்வேறு சமயத் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்களும் பங்கேற்று தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய இசைந்துள்ளனர்.
thesa otrumai
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 16-02-2015 சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்களும்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி அவர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் ஹனீபா அவர்களும்,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களும், கிருத்துவ இயக்கங்கள் திரு இனிகோ இருதயராஜ் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக