Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 பிப்ரவரி, 2015

நமதூர் இஸ்திமா - இரண்டாம் நாள் பகல்



எந்த ஒரு விளம்பரம் இல்லை. நோட்டீஸ் வினியோகம் இல்லை. போஸ்ட்டர் ஒட்டவும் இல்லை. ஆனால் ஒரோ ஒரு
போன் தான் . அலை அலையாக வந்த கூட்டம். எந்த ஒரு கவர்ச்சியான பேச்சுக்கலே , வாகனம் மற்றும் உணவு ஆகியவை இலவசங்கலே இல்லை. ஆனால் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து வந்த கூட்டம் இது. ஆம் , இது தான் தப்லீக் ஜமாத்தின் தனித்தன்மை. அனைத்து இயக்கங்களுக்கே சவாலாக இது அமைந்தது என்று கூறினால் இது தகும்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் இஸ்திமா நடைபெறும் அருகில் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளி வாசல் அமைந்து இருந்ததால் இவர்கள் மார்க்க ரீதியாக வேறுபட்டாலும் தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் பாங்கு கூறும் போது தப்லீக் ஜமாத்தினர் தங்களுடைய பயானை பாங்கு சொல்லும் வரை நிறுத்தி இருந்தனர்.

கிட்ட தட்ட 10 க்கும் மேற்பட்ட பேருந்துகள் அரசு டெப்போவிலிருந்து வந்துயிருந்தன. தப்லீக் ஜமாத்தின் சார்பாக எந்த ஒரு விளம்பர பதாகையும் வைக்கவில்லை. ஆனால் ஒரு சில அதாவது தப்லீக் ஜமாத்தினரே முகம் சுழிக்கும் வகையில் இந்த இஸ்திமாவை விளம்பர படுத்தியது சில நிருவனம் மற்றும் இயக்கம்.

இரவு 10 மணியளவில் நிகழ்ச்சி துஆவுடன் நிறைவு பெற்றன.












நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக