Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நமதூர் மற்றும் நமதூர் அருகே நடைபெற்ற இஸ்லாமிய அழைப்புப் பணி ....


பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு அருகில் உள்ள பெரங்கியம் என்ற கிராமத்தில் அறிவகம் தஃவா குழுசார்பாக தஃவா நடைபெற்றது.


முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்றான 
இஸ்லாத்தை ஏனைய சமூக மக்களுக்கு எடுத்துசொல்லிடும் அழகியதொரு அழைப்பு பணியான தஃவா பணியை தமிழகத்தில் கிராமங்கள் முதல் 
நகரங்கள் வரை பல்வேறு வழியாக அறிவகம் தஃவா குழு கடந்த பல 
வருடங்களாக செய்து வருகிறது.


இதன் ஒரு பகுதியாக லெப்பைக்குடிக்காடு அறிவகம் தஃவா குழு சார்பாக 
பெரங்கியத்தில் தஃவா - இஸ்லாமிய அழைப்புபணி நடைபெற்றது.

இதில் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.




மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக