Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 26 பிப்ரவரி, 2015

லப்பைகுடிகாடு சாலையில் 8.50 கி.மீ. நீளத்திற்கு ஒருவழிச் சாலையிலிருந்து இருவழிச்சாலையாக ரூ. 14.10 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி முதல் அரியலூர் வரை ரூ.1½ கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதை கலெக்டர் தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.1½ கோடி மதிப்பில் தார்ச்சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் சில்லக்குடி முதல் அரியலூர் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் தரேஸ்அஹமதுநேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையானமருதையாற்றின் குறுக்கே ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 4.50 மீட்டர் உயரத்தில் சில்லக்குடி மற்றும் அரியலூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பாலமானது 7.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டு வருகின்றது. இதுவரை மருதையாற்றில் நீர் வரத்தின்போது 10 கி.மீட்டர் தூரம் சுற்றி வந்த நிலைமாறி எளிதில் அரியலூரை சென்றடைய இயலும். மேலும் சில்லக்குடி முதல் அரியலூர் வரை 10 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றது.
வெப்பமானி கருவியுடன் ஆய்வு
ஜல்லி தார்க்கலவை தயாரிக்கும் பணியின்போது ஜல்லியானது 108 டிகிரி சென்டிகிரேடுக்கும், தாரானது 165 டிகிரி சென்டிகிரேடுக்கும் வெப்பப்படுத்தப்பட்டு, இரண்டும் கலக்கப்படுகின்றது. இந்த கலவை கலக்கப்பட்ட பிறகு அது 135 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்க வேண்டும். இந்த நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தார்க்கலவை நல்ல நிலையில் உள்ளதா என்றும், தார்க்கலவை கொட்டப்படுவதற்கு முன்னர், தார்க்கலவையை சாலையில் நன்கு பிடிக்கும் அளவுக்கு ஊற்றப்படுகிறதா அல்லது அடர்த்தி மிகவும் குறைக்கப்பட்ட தார் தெளிக்கப்பட்டுள்ளதா என்றும், சாலையில் கொட்டப்படும் தார்ஜல்லி கலவை 110 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உள்ளதா என்று டிஜிட்டல் வெப்பமானி கருவி உதவியோடு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இருவழிச்சாலைகள்
2014-15ம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் ரூ. 68 கோடி மதிப்பீட்டில் 34 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட முக்கிய சாலையான ஆலத்தூர்- செட்டிக்குளம்- செஞ்சேரி சாலையில் 5.88 கி.மீ நீளத்திற்கு ரூ. 7 கோடி மதிப்பில் இடைவழிச் சாலையிலிருந்து இரு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட இதர சாலைகளில் புதுவேட்டகுடி-லப்பைகுடிகாடு சாலையில் 8.50 கி.மீ. நீளத்திற்கு ஒருவழிச் சாலையிலிருந்து இருவழிச்சாலையாக ரூ. 14.10 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணாபுரம்-கூகையூர் சாலையில் 9.60 கி.மீ. நீளத்திற்கு ரூ. 13கோடி மதிப்பில் ஒருவழிச்சாலையிலிருந்து இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட இதர சாலைகளில் 2 பணிகள் 4 கி.மீ. நீளத்திற்கு ரூ. 4கோடி மதிப்பில் ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தப்படவுள்ளது. மேலும் 18 பணிகள் 44.20 கி.மீ. நீளத்திற்கு ரூ. 24.83 கோடி மதிப்பில் சாலை மேம்பாடு பணிகள் நடைபெறவுள்ளது. மேற்கண்ட சாலைகளில் 6 சிறுபாலங்கள் ரூ. 1.07 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவிசெயற்பொறியாளர் மதியழகன், ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளர் இராம.சொக்கலிங்கம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக