Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 1 நவம்பர், 2014

இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் 12.36% சேவை வரி செலுத்த வேண்டுமா? மத்திய அரசின் சுற்றறிக்கை முழு விபரம் !


அக்டோபர் 14, 2014 அன்று Central Board of Excise and Customs என்ற மத்திய அரசு நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் மத்தியில் இது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - தங்களது பணத்தை வங்கிகள் மூலமோ, பிற பணம் மாற்றும் நிறுவனங்கள் மூலமோ இந்தியாவிற்கு அனுப்பும் போது, அதற்கு 12.36% சேவை வரி (SERVICE TAX) செலுத்த வேண்டுமோ என்ற கேள்வி - அந்த சுற்றறிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பொதுவாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப - அவர்கள் வாழும் நாட்டில் உள்ள பணம் மாற்றும் நிறுவனத்தை அணுகுவார்கள். உதாரணமாக - துபையில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிற்கு 1000 திர்ஹம் அனுப்புகிறார்கள் என்றால், அங்குள்ள ஒரு நிறுவனம்/வங்கி மூலம், அதற்கான கட்டணம் (உதாரணம் 20 திர்ஹம்) செலுத்தி இந்தியாவிற்கு பணம் அனுப்புவார்கள்.

இந்தியாவில் அந்த பணத்தை - துபையில் உள்ள நிறுவனம் தொடர்பு வைத்துள்ள இந்திய நிறுவனம்/வங்கி மூலம் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர் பெறுவார். துபையில் உள்ள நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட அந்த பணத்தை இந்தியாவில் வழங்க, இந்திய நிறுவனம்/வங்கி - சிறு கட்டணம் வசூலிக்கும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய நிறுவனம்/வங்கி பணத்தை இந்தியாவில் விநியோகம் செய்ய வசூல் செய்யும் கட்டணத்திற்குதான் (COMMISSION/FEE) சேவை வரி விதித்துள்ளது, அனுப்பப்பட்ட மொத்த பணத்திற்கு அல்ல.

உதாரணமாக இந்தியாவிற்கு 100 ரூபாய் அனுப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனை இந்தியாவில் வழங்க இந்திய நிறுவனம்/வங்கி 10 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த சுற்றறிக்கை 10 ரூபாய்க்கு தான் 12.36% சேவை வரி விதிக்கிறது, 100 ரூபாய்க்கு அல்ல.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு - 2011ம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்) வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கை முழுமையாக






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக