Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 15 நவம்பர், 2014

உடன்குடி பள்ளிவாசலில் கைப்பற்றப்பட்ட கைபேசியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பயிற்சி காணொளி !

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியிலுள்ள பள்ளிவாசலின் அருகே கைப்பற்றப்பட்ட கைபேசியில் பயங்கரவாதிகளின் பயிற்சி காணொளி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடன்குடியிலுள்ள பள்ளிவாசலில் மாணவர்களுக்கான அரபி கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் மாணவர்கள் அதிகாலை தொழுகைக்காக தயாரான போது, வெளியே ஒரு இளைஞரின் நடமாட்டம் தெரிந்துள்ளது. தொழுகையை முடித்து வெளியே வந்த மாணவர்கள், சந்தேகம் அடைந்து அவனை விசாரிக்க போன போது, தப்பி ஓடி விட்டான்.

இது குறித்து குலசேகரப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்வப இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் நடத்திய விசாரணையில், அந்த மர்ம நபர் பள்ளிக்கு அருகே உள்ள மரக்கடையில் படுத்து தூங்கியது தெரியவந்தது. அவ்விடத்திலிருந்து போர்வை, செருப்பு மற்றும் விலை உயர்ந்த அலைபேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
அலைபேசியை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறும் காணொளிகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சென்னை, ஆவடி டாங்க் தொழிற்சாலை படங்களுடன் இந்திய ராணுவத்தினர் பயிற்சி பெறும் படங்கள் மற்றும் ராணுவ உடையில் ஒரு நபர் இருக்கும் காட்சிகளும் அதில் இருந்துள்ளன. அத்துடன் நெல்லை மாவட்டம், பேட்டை, ஐ.டி.ஐ.,யில், பிட்டர் படிப்பு முடித்ததற்கான சான்றிதழும் இருந்தது. அதில், ‘இசக்கி ராஜ், குமார கோவில் தெரு, தெற்கு ரத வீதி, கல்லிடைக்குறிச்சி, நெல்லை என்ற முகவரி இருந்துள்ளது.
தொடர் விசாரணையில், அந்த மர்ம நபர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். மத்திய ராணுவப்படையில் பணியாற்றும் தனது சகோதரன் அனுப்பி தந்த வீடியோ காட்சி மற்றும் படங்கள் தான் அவை என விசாரணையின் போது தெரிவித்துள்ளார். விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் வந்த பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், பயங்கரவாத செயல்களுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிடுகிறார்களா என்கிற ரீதியிலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக