Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 1 நவம்பர், 2014

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!

ஐதராபாத்கருவில் இருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளித்து ஐதராபாத் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாட்டில் முதல் முறையாக ஹைதராபாத்தில் உள்ள டாக்டர்கள் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நவீன சிகிச்சை மூலம் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பினை சரிசெய்து சாதனை செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த அருண் என்பவரின் மனைவி சிரிஷா கர்ப்பமானர். இவர் மருத்துவ சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சிரிஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய பிரச்சனை இருப்பதை கண்டறிந்தனர்.பின்னர் குழந்தை பிறந்த பிறகு சிகிச்சை அளிப்பது கடினம் என்பதால், கருவிலேயே சிகிச்சை அளிப்பது குறித்து நாகஷ்வர ராவ் (குழந்தை மகப்பேறு மற்றும் இதய சிகிச்சை நிபணர்) ஆலோசனை நடத்தப்பட்டது
12 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு, குழந்தையின் பாதிக்கபட்ட இதய வால்வை கருவிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக