உலகின் நீண்ட இரயில் பாதையில், முதல் சரக்கு ரயிலை இயக்கிய பெருமையைக் கொண்டுள்ளது சீனா.
நவம்பர் 18ம் தேதி, தென்சீனாவின் தொழில் நகரமான ‘இவு’விலிருந்து ஸ்பெயின் தலைநகரான மேட்ரிட் நகர் நோக்கி இந்த முதல் ரயில் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
82 சரக்குப் பெட்டிகளுடன் செல்லும் இந்த ரயில் 6200 மைல் (ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர்) தூரத்தை, 6 நாடுகளைக் கடந்து 21 நாள்களில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ’இவு’ நகரம், நுகர்வுப் பொருள்களின் மொத்த வியாபரத்தின் தாயகம் ஆகும். ஆகவே இந்த ரயில் போக்குவரத்து அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக