Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 17 நவம்பர், 2014

தேவைப்படும் பண்பாடு – ஒரு நிகழ்வு.

அவள் எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும்,தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன காரணம்அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இஸ்லாமியத் தோற்றம் காரணமாஎன்னைப் போன்ற இதே தோற்றத்தில் பலர் உள்ளனரே! எனவே அது காரணமாக இருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றும். நான் இஸ்லாமிய விவகாரங்களை மிகுந்த ஈடுபாட்டோடும்,
 உணர்ச்சிப் பூர்வமாகவும் வாதிப்பேன் அதுதான் காரணமாஇருக்க முடியாது. என்னைப் போல் பலர் இப்படி இருக்கிறார்களே. அவளால் சரியான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கும் தனது விரிவுரையாளருக்கும் இடையே இருக்கும் தடையைஅவர் தன்னை உதாசீனப்படுத்தும் போக்கை நீக்க பல வழிகளிலும் முயன்று பார்த்தாள். அவளது முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இதனால் மிகவும் கஷ்டப்பட்டுமிகுந்த ஈடுபாட்டோடு ஒரு வருடகாலம் செலவிட்டு தான் சமர்ப்பிக்கும் ஆய்வு(க் கட்டுரை)களை நியாயமான எந்தக் காரணமுமின்றி விரிவுரையாளர் மறுத்து விடுவாரோ என்ற பதற்றம் அவளுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தையும்கலக்கத்தையும் கொடுத்தது. விரிவுரையாளரின் இந்தக் கடும் போக்கு எப்போதாவது எதிர்பாராத பிரச்சினைகளையும்கஷ்டங்களையும் கொண்டுவரலாம் என அவள் பயந்தாள்.
அந்த மாணவி ஒரு அல் குர்ஆன்ஹதீஸ் வகுப்புக்குப் போய் வருவாள். அங்கு தான் படிப்பவற்றை நடைமுறையில் நடைமுறைப்படுத்தி பார்க்க வேண்டும் என்பது அவளது ஆசை. விரிவுரையாளருடனான இந்தப் பிரச்சினையின் போது அல் குர்ஆன்ஹதீஸை வைத்து இயங்கி இதற்குத் தீர்வு காண முடியுமா என சிந்தித்தாள். எனினும் விளைகள் எதையும் அவள் காணவில்லை.
ஒரு நாள் விரிவுரையாளர் மிகுந்த கடுப்புடனும்கவலையோடும் காணப்பட்டாள். எனக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு வந்துள்ள நோயால் பேச முடியாத நிலைக்கு வந்து விட்டாள். இந்த நிலையின் தாக்கத்தால் உங்களோடு உறவாடுவதிலும்உதவுவதிலும் சில பாதிப்புகள் இருக்கக் கூடும்.” எனக் கூறிய விரிவுரையாளர் அவ்வாறு என் நடத்தை இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இப்போது அந்த மாணவி தனது உறவினர் ஒருவரின் பிள்ளைக்கும் அதே நோய் இருந்ததை நினைவு கூர்ந்தாள். அத்தோடு கீழ்வரும் இறைவசனமும் அவள் மனதில் ஓடியது.
நன்மையும் தீமையும் சமமாக மாட்டாநீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுதுயாருக்கும் உமக்கிடையேபகைமை இருந்ததோஅவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.” (ஹாமீம் சஜ்தா 41 -34)
தனக்குத் தேவைப்பட்ட ஒரு செயல் திட்டம் கிடைத்துவிட்டது என்றவள் உணர்ந்தாள். இந்த ஆயத்தின் படி தனது ஆசிரியைக்கு உதவுவோம்அதன் மூலம் அவரை நட்பாக்குவோம் என அவள் தீர்மாணித்துக் கொண்டாள்.

இன்டர்நெட்டில் நுழைந்தாள். தனது விரிவுரையாளரின் மகளுடைய நோய் பற்றியும்அதை சரி செய்வது சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் திரட்டினாள். அதே நோயால் பாதிக்கப்பட்ட தனது உறவினரின் மகளுக்கு சிகிச்சையளித்த குறிப்பிட்ட டாக்டரின் மெயிலையும் அவரது தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொண்டாள். நோய் பற்றியும்அதனைக் குணப்படுத்தும் முறைகள் பற்றியும் அந்த உறவினரிடமிருந்து மேலதிகத் தகவல்களையும் பெற்றுக் கொண்டாள். இவ்வாறு ஒரு ‘file’ஐயே தயாரித்த மாணவி தனது ஆசிரியையிடம் சென்று நீங்கள் நம்பிக்கையிழக்கத் தேவையில்லைஉங்கள் மகளுடைய நோயை குணமாக்க முடியும் என்ற நற்செய்தி சொல்லத் தீர்மாணித்தாள். இருந்த போதிலும் தனது விரிவுரையாளர் தன்னை சந்தோஷமாக வரவேற்காமல் போகலாம். அல்லது வழமையாக தன்னிடம் காட்டும் வெறுப்போடும் நடந்து கொள்ளலாம் அப்படி எது நடந்தாலும் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்றும் அவள் எண்ணத் தவறவில்லை.
இதே எண்ணத்தோடு விரிவுரையாளரின் அலுவலகத்திற்குச் செல்ல நினைக்கும் போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்று பார்த்தாள். அவளை நிலைகுலையச் செய்யும் கசப்பான உண்மையை அங்கு கண்டாள். குறிப்பிட்ட அந்த விரிவுரையாளரின் பாடத்தில் அவள் தேர்ச்சியடையவில்லை. கண் முன்னால் உலகமே சுற்றுவது போல் இருந்தது அவளுக்கு. ஒரு வருடமாக அந்த விரிவுரையாளருடன் தான்பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குள் வந்து போனது... அவளது ஆய்வுகளை அவர் மறுத்து வந்ததுஅவள் உதவி செய்தாலும் கூட அதை முக மலர்ச்சியோடு அவர் வரவேற்காதது மேலும் அவளை காயப்படுத்தியது என்னவெனில் எப்போதையும் விட இம்முறைப் பரீட்சையில் அவள் அதிகமான கேள்விகளுக்கு மிகச் சரியாகவே பதில்கள் எழுதியிருந்தாள். இந்த நினைவுகள் ஒவ்வொன்றாக அவளது உணர்வுகள் மீது வலிகளை ஏற்படுத்தி ஓடியது. இது பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
இந்நிலையில்
விரிவுரையாளரின் மகளுக்காகத் அவள் தயாரித்து வைத்திருந்த அந்த ‘file’ அவளது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது. தனது ஆசிரியை வேண்டுமென்றே தன்னை பெயிலாக்கி’ இருக்கக் கூடும் என்ற சிந்தனை வரும் போது அவளால் அதைத் தாங்க முடியவில்லை ஏன் ஏன் என் மீது இவ்வளவு வன்மமாக நடந்து கொள்கிறார் என்ற கேள்விகவலைகோபம்ஆத்திரம்இயலாமை என பலவித வலிகளின் பெருக்கத்தால் அவளது விழிகளில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதைக் கட்டுப்படுத்திக் கொண்டே 
கீழே விழுந்த பைலையும்சிதறிப்போன தாள்களையும் ஒன்று திரட்டி எடுத்துக் கொண்டாள். ஆசிரியையிடம் செல்லும் தீர்மாணத்தை மாற்றிக் கொள்வோம் என உறுதியாகவே சிந்தித்தாள். பாதிக்கப்பட்ட எல்லோரும் நினைப்பது போலவே அவளும்தனக்கு அநியாயம் செய்ததாக தான் உணரும் அப்பெண்ணுக்கு (விரிவுரையாளருக்கு) நான் ஏன் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் மேலோங்கியது. வீட்டுக்குத் திரும்ப எத்தனித்தாள். எனினும் அவள் உள்ளிருந்து ஒரு குரல் அவளுடன் பேசியது:

நீ சத்தியத்தில் உள்ளாய். விரிவுரையாளர் உன்னை ஃபெயிலாக்கியதையும் அவருக்கு நீ உதவி செய்வதையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாய்பழிவாங்கும் வகையில் அவள் உன்னிடமிருந்து எந்த உதவியையும் பெறத் தகுதியில்லைதான். ஆனால் நீ இந்த பைலைத்’ தயாரித்ததற்கு அவள் உன்னை பாசாக்க வேண்டும்என்பதுதான் காரணமாஅப்பெண்ணிடம் என்ன மாறியிருக்கிறதுஇப்படி நடக்கலாம் என்று நீ எதிர்பார்க்கவில்லையா?முன்பும் அப்படித்தான் இருந்தாள் இப்போதும் அப்படியே இருக்கிறாள். 
பெண்ணே விழித்துக் கொள்… இறை திருப்தியை நாடி அல்குர்ஆனின் வசனமொன்றை நீ நடைமுறைப்படுத்த தீர்மாணித்தாய். இப்போது நீ எவ்வாறு செயல்படப் போகிறாய் குர்ஆனின் வழியாஅல்லது உனது மன உணர்வின்படியாஅந்த வசனத்தைப் பூரணமாக மீண்டும் ஒருமுறை வாசிசரியானதை தேர்வு செய்!

வசனம் பேசியது:
நன்மையும் தீமையும் சமமாக மாட்டாநீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுதுயாருக்கும் உமக்கிடையேபகைமை இருந்ததோஅவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்மேலும்மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிரவேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.) அல் குர் ஆன் 41 : 34,35

அல்லாஹ்வின் வசனம் அவள் உள்ளத்தின் குரலை உரத்துக் கூறியதைக் கேட்டதும் கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை – தனது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு கண்ணீர் உதிர்ந்தாள்… 
உள்ளத்தின் குரலுக்கு அவள் செவிமடுத்தாள். தனது உள்ளத்தின் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டாள். தனது ஆசிரியையின் அலுவலகம் நோக்கி உறுதியுடன் அடியெடுத்து வைத்து நடந்தாள். அனுமதி கேட்டாள்.

ஆசிரியை எழுந்து நின்றார். தான் ஃபெயிலானதற்கான காரணம் கேட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று எதிர்பார்த்த அவர் தீர்க்கமாகவும்முடிவாகவும் பதில் சொல்லத் தயாராகி நின்றார்.
ஆனால் மாணவி பைலைக்’ கொடுத்தாள்:
இந்த பைலில் உங்களது மகளுடைய நோயின் தன்மை பற்றிஅதற்கான நிவாரணம் பற்றி முழு தகவல்கள் உள்ளன. உங்களது பிள்ளையின் நோயைக் குணப்படுத்த இது மிகவும் பயன்படும். உங்களது மகளின் நோய் பற்றி நான் கேள்விப்பட்ட நாளிலிருந்து இத்தகவல்களை சேகரித்து வந்தேன். மேலும் பல தகவல்களை மேலும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவற்றை உங்களுக்கு அனுப்ப உங்களது ஈமெயிலைத் தந்தால் வசதியாக இருக்கும்.” என்றாள்.

விரிவுரையாளரால் எதுவும் பேச முடியவில்லை. திகைத்துப் போனாள். என்ன பதில் சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. நன்றி சொல்லக் கூட அவருக்கு முடியவில்லை. தனது ஈமெயிலை இயந்திரத்தனமாக எழுதிக் கொடுத்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட மாணவி தாங்க முடியாத பாரத்துடன் படிகளை கடந்து வந்தாள். கண்களின் கண்ணீர் கசிவை அவளால் நிறுத்திக் கொள்ள இயலவில்லை. யாருடைய கண்களிலும் படாமல் அதனை மறைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்... 
நோய் பற்றியும்அதனைக் குணப்படுத்துவது சம்பந்தமாகவும் மேலும் தகவல்கள் கிடைத்த போது அவற்றை தனது ஆசிரியைக்கு அனுப்பி வைத்தாள்.

அவரால் தனக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை அவளால் மறக்க முடியவில்லை. தனது உணர்வுகளை இவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்வது அவளுக்கு மிகச் சிரமமாகவே இருந்தது. தனது இறைவனிடம் அவள் கொண்டிருந்த அன்பே இவ்வாறான முடிவுக்கு அவளை வரச் செய்தது.
சிறிது நாட்கள் சென்றது. மாணவியின் டெலிபோன் ஒலித்தது. எடுத்தபோது மறுமுனையில் தன் ஆசிரியை பேசுவதைச் கேட்டாள். பல்கலைக்கழகத்திற்கு உடனே வருமாறு ஆசிரியை சொன்னார். அங்கு சென்ற மாணவி சற்று வெட்கத்தோடு கூடிய சூடான வரவேற்பை விரிவுரையாளரிடம் கண்டாள். ஆசிரியை கூறினாள்: அன்புக்குரியவளே! நீ அதிக ஈடுபாடும்கவனமும்முயற்சியும் கொண்ட மாணவி. எனவே நமது துறைத் தலைவரிடம் இவற்றைச் சொல்லி நீ மீண்டும் தேர்வு எழுத அனுமதி பெற்றுவிட்டேன். ஒரு மாதத்திற்குள் நீ தேர்வு எழுத வேண்டியிருக்கும். உன் தோழிகளோடு விடுமுறை முடிந்து வரும் ஆண்டிலேயே நீ இணைந்து கொள்ள முடியும் என்றார் ஆசிரியர்.
மாஷா அல்லாஹ்... அந்த நேரத்தில் மாணவியின் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் மலர்ந்த்து. நான் கேட்பது உண்மைதானாஅவளால் நம்ப முடியவில்லை. இம்முறை அவள் திரும்பிச் செல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் படியிறங்கினாள். பறந்து செல்வது போலிருந்தது அவளுக்கு.
அல் குர்ஆனின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் பரீட்சையில் வெற்றி கண்டமையே அவளை மிகவும் சந்தோஷப்படுத்தியது.
அவள் தன் காரில் நுழைந்தாள். திறப்பை வைத்துத் திருப்பினாள்.
அவளது வாய் உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே நபியே உம்மை நாம் அனுப்பி வைத்தோம்.” என்ற வசனத்தை ஓதியது.

யா அல்லாஹ் நான் உனக்கு அடிமையாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். நீ என்னைக் கைவிட்டுவிடவில்லை. வழி காட்டலுக்கு ஒரு நூலையே தந்தாய்.
அல் முஜ்தமஃ சஞ்சிகை
செப்டெம்பர் மாத இதழ்.

மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக