தமிழக ஊடகங்கள் எங்கோ ஒரு மூளை யில் ISIS இயக்கத்தினர் பயிற்சி எடுக்கிறார்கள், தாலிபான்கள் பயிற்சி எடுக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் ஊடகங்கள்… இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS ன் தலைமை அலுவலகமான நாக்பூரில் RSS இயக்கத்தினர் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள். RSS ன் பெண்கள் பிரிவான துர்காவாகினியும் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள்.ஆனால் அதை பற்றியும் ஒரு நாள் கூட செய்தி வரவில்லையே ? அது ஏன் ? தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் உள்ளிட்ட நாளிதழ்களில் ஒரு நாள் கூட இது மாதிரியான செய்திகள் வந்ததாக தெரியவில்லை.
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிட ஒருபோதும் தயங்க கூடாது.
முஸ்லிம்களை பற்றி எவ்வளவு தரக்குறைவாக எழுதினாலும் முஸ்லிம்கள் சகித்து கொள்வார்கள், அதிகபட்சமாக பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என்று நிறுத்திக் கொள்வார்கள்.
ஆனால் RSS பற்றி ஒரு வரி உண்மையை எழுதிவிட்டால் பத்திரிக்கை அலுவலகத்தை RSS இயக்கத்தினர் சூறையாடி தீ வைத்து கொளுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக ஊடகங்கள் உண்மையை எழுத மறுக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் செய்த வாட்டர் கேட் ஊழலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி அவரை அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி வீச வைத்தது ஊடகம்.
தமிழக கர்நாடக எல்லையில் வீரப்பன் பதுங்கியிருந்த போது காவல்துறையும், ராணுவமும் நுழைய முடியாத காட்டின் உள்ளே நுழைந்து வீரப்பன் என்பவர் யார் என்பதை உலகுக்கு காட்டியது ஊடகம்.
அனைத்து சாமியார்களின் காம லீலைகளையும் வெளியுலகுக்கு காட்டி செக்ஸ் சாமியார்களை தோலுரித்து காட்டியது ஊடகம்.
ஆனால் RSS ன் ஆயுத பயிற்சியை மட்டும் பகீரங்கப்படுத்த மறுப்பது ஏனோ ?
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் தம்முடைய கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
ஆனால் RSS ன் ஆயுத பயிற்சியை மட்டும் பகீரங்கப்படுத்த மறுப்பது ஏனோ ?
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் தம்முடைய கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
Thanks :Todayindia.info
பெரம்பலூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயி கைது
பதிலளிநீக்குபதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 01, 2:00 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது19 Share/Bookmark printபிரதி
பெரம்பலூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயி கைது
Ads by VeriBrowseAd Options
பெரம்பலூர்,நவ.1–
குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரே உள்ள அரசு புறம் போக்கு நிலத்தில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. இதற்கு அருகில் அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாஸ்கர் விவசாயி (வயது 49) வயல் உள்ளது.
இந்த நிலையில் பாஸ்கர், கால்நடை மருத்துவ மனைக்காக அமைக்கப்பட்டிருந்த அஸ்திவாரத்தை தோண்டியும் அதை சமப்படுத்தி அந்த இடத்தில் நெற் பயிர்களை நட்டும், அப்பகுதியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வேப்பமரத்தை வெட்டி பொது பாதையும் சேதப்படுத்தினார்.
இதை அறிந்த லப்பைக்குடிக்காடு வடக்கு கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரிடம் இது குறித்து விளக்கம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் மனோகரனை கத்தியை காட்டி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தாக தெரிகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் மங்களமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிவு பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.