Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 நவம்பர், 2014

இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்றம் !

பெங்களுரூ:  நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான பணியாளர்கள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பொதுவாக ஐடித் துறையில் பணியாளர்களின் வெளியேற்றம் சாதரணமாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாக கருத்து நிலவி வருகிறது. இதனால் பணியாளர்கள் வெளியேற்றத்தை குறைக்க இன்போசிஸ் கடுமையாக முயற்சித்து வருகிறது. இதற்காக பல திட்டங்களையும் தீட்டி வருகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது நிலவும் அதிகப்படியான பணியாளர்கள் வெளியேற்றத்தை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெரிதும் உதவி வருவதாக தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவின் ராவ் தெரிவித்தார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களில், பணியாளர்கள் வெளியேற்றத்தை குறைப்பும் முக்கியமான ஒன்றாகும். மேலும் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றும் மிகவும் அதிகமாகும்.
2014ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவின் போது இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்ற வகிதம் 20.1 ஆக இருந்தது. இதுவே விப்ரோ நிறுவனத்தின் அளவு 17 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 12.8 சதவீதமாக உள்ளது.

திறன்வாய்ந்த பணியாளர்களை நிறுவனத்தில் வெளியேறாமல் தடுக்க இன்போசிஸ் நிறுவனம் ஜூன் செப்டமபர் காலாண்டிற்கு 100 சதவீத போனஸ் கொடுத்தது.மேலும் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நிறுவனத்துடன் இணைத்திடவும் 19,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.
மேலும் சில முக்கிய திட்டங்கள் மற்றும் புதிய பிராஜெக்ட் மூலம் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றத்தை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 13-15 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக