பங்குச்சந்தை மற்றும் டாலர் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணங்களால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திலிருந்து டாலர் பக்கம் திரும்பியதால் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் தங்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அதன் விலை உயர்ந்தே வந்தது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்ப்பட்ட பங்குச்சந்தை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து தொழில் நிறுவனங்களின் பங்குகள் மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று (புதன்கிழமை) வரலாறு காணாத அளவுக்கு பங்குகள் உயர்ந்து, 27,915 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 280 விலை குறைந்து, ரூ.19 ஆயிரத்து 376-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாளில் பவுனுக்கு ரூ.1,168 வரை குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்ததன் தாக்கமாக வெள்ளி விலையும் சரிவடைந்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1280 குறைந்து, புதன்கிழமை ரூ.34 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சியின் காரணமாக நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக