மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் ரயில்வே பட்ஜெட்டில், ரயில் திட்டப் பணிகள், கட்டமைப்பு வசதிகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக முதல்கட்டமாக பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் ரயில் பயணச்சீட்டு விநியோகிக்கும் பணி விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன்படி ரயில் பயணச் சீட்டுகளின் முன்பதிவு, பயணச் சீட்டு மற்றும் உடனடி பயணச் சீட்டு ஆகியவற்றை விநியோகிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்படி, தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு, கவுன்ட்டர்களில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பயணச் சீட்டுக்களை விநியோகிப் பார்கள். ரயில்வே ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டம் நாட்டின் 16 மண்டலங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரயில் பயணச் சீட்டு விநியோகிக்கும் கவுன்ட்டர்கள் போதுமான அளவுக்கு இல்லாதது, கவுன்ட்டர்கள் இருந்தும் போதுமான ஊழியர்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதன் எதிரொலியாகவே இந்த தனியார் மயம் என கூறப்படுகிறது. இருப்பினும் பட்ஜெட்டில் மோடி அரசு அறிவித்த தனியார் மய அறிவிப்பின் தொடர்பாகவே இது செயல்படுத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக