இடமிருந்து வலமாக கார்லஸ் சிம், பில் கேட்ஸ், அமானிகோ ஆர்டேகா, வாரன் பஃப்ஃபெட்
தினமும் ஒரு மில்லியன் (ரூ.6 கோடி) வீதம் செலவு செய்தாலும் தனது சொத்துக்கள் முழுவதையும் செலவழிக்க, மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்சுக்கு 218 ஆண்டுகள் ஆகும் என சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபேம் (Oxfam) என்ற அரசுசாரா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏழைகளில் பாதிபேரிடம் உள்ள சொத்துக்களுக்கு இணையான சொத்து மதிப்பு உலகின் முதல் 85 பணக்காரர்களிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பில் கேட்சுக்கு 218 ஆண்டுகள் ஆகும் என்றால் மெக்சிகோ பணக்காரர் கார்லஸ் சிம்முக்கு சொத்துக்கள் முழுவதையும் செலவிட 220 ஆண்டுகளும், ஸ்பெயினின் அமானிகோ ஆர்டேகாவுக்கு 172 ஆண்டுகளும், அமெரிக்காவின் வாரன் பஃப்ஃபெட்டுக்கு 169 ஆண்டுகளும் ஆகும் என அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக