புதுடெல்லி: கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச கழிப்பறை திருவிழா டெல்லியில் இன்று தொடங்குகிறது. கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச அளவில் பல்வ«று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பூடான், நேபாளம், இலங்கை, லாவோஸ், வியட்நாம், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கழிப்பறை திருவிழா டெல்லியில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை, சுலாப் இன்டர்நேஷ்னல் சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் பிரிந்தேஷ்வர் பதக் கூறியதாவது:
தூய்மையின் முக்கியத்துவம் குறித்தும், கழிப்பறைகளின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், 1000 பள்ளி மாணவர்கள், மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் 200 பேர், 100 விதவைகள் உட்பட 2000ம் பேர் பங்கேற்க உள்ளனர். நாரினால் செய்யப்பட்ட கழிப்பறை தொட்டிகளை தலையில் அணிந்தவாறு, ‘2019க்குள் அனைவருக்கும் கழிப்பறை‘ என்பதை வலியுறுத்தி மத்திய டெல்லி பகுதியில் மனிதச் சங்கிலி இன்று நடத்த உள்ளோம். இவ்வாறு பதக் தெரிவித்தார்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக