கோவை: கல்வி, வரலாற்றை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கோவையில் நடைபெற்ற பெண்கள் எழுச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பாசிச சக்திகள் இந்தியாவில் பன்முக கலாச்சார வரலாற்றை துடைத்தெறிய தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர்.ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் மட்டுமல்ல, கல்வியிலும் பாசிஸ்டுகள் ஊடுருவி வருகின்றனர்.நாட்டின் கலாச்சாரம் என்ற பெயரால் நடத்தும் முயற்சி நமது பன்முக-கலாச்சார விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாகும்.
2.வகுப்பு கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்.அவர்களுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.பெரும்பாலான கலவரங்களிலும் முஸ்லிம் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது.சுதந்திரத்திற்கு பிறகு நடந்த வகுப்புக் கலவரங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய-மாநில அரசுகள் மீளாய்வுச் செய்யவேண்டும்.
3.மகளிர் இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
4.கட்டாய குடும்பக்கட்டுப்பாடு சிகிட்சையை நிறுத்தவேண்டும்.இத்தகைய சம்பவங்களில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை தண்டிக்கவேண்டும்.
5.யு.ஏ.பி.ஏ, அப்ஸா உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும்.
6.லவ் ஜிஹாத் என்ற அவதூறுப் பிரச்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.
7.கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடவேண்டும்.அதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக