இந்தியாவில் மொபைல் போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.
செல்போனில் இணையதளம் மூலம் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்யும் வாட்ஸ் அப் சேவை தற்போது சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறது. மாதத்தில் ஒருமுறையாவது வாட்ஸப்பை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 7 கோடியை கடந்து விட்டது. அந்த வகையில் வாட்ஸ் அப்பின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியாவும் விளங்கி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் 3 கோடியாக இருந்ததாகவும், தற்போது அது 60 கோடியை கடந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக