800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்து டெல்லியை ஆட்சி புரிகிறார் என்று விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
உலக இந்து மாநாட்டை துவக்கி வைத்து அசோக் சிங்கால் ஆற்றிய உரையில் கூறியிருப்பது:
டெல்லியில் கடைசியாக ஆண்ட இந்து மன்னர் பிருதிவிராஜ் சவுகான் ஆவார்.அதன் பிறகு நரேந்திரமோடி என்ற அபிமானியான இந்துவின் கரங்களின் ஊடே டெல்லியின் ஆட்சி திரும்ப கிடைத்துள்ளது.12-நூற்றாண்டின் 2-ஆம் பகுதியில் வட இந்தியாவை ஆட்சிபுரிந்த பிருதிவிராஜ் சவுகானுக்கு பிறகு இந்த ஆட்சி ஒரு அபிமானியான இந்துவின் கரங்களில் கிடைத்திருக்காவிட்டால் இனியும் 800 ஆண்டுகள் காத்திருந்திருந்த பிறகே அது நிகழ்ந்திருக்கும்.உலகின் நலனுக்கு வெல்லமுடியாத இந்துத்துவம் தேவை.இதற்காகத்தான் 1964-ஆம் ஆண்டு இந்து மதம் ஸ்தாபிக்கப்பட்டது.இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக