Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 நவம்பர், 2014

ஷாஹித் ஆஸ்மி ...

ஷாஹித் ஆஸ்மி ..இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இவர் வழக்கரினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.தான் , தனது குடும்பம் என்று சுயநலத்தோடு வாழும் இன்றைய உலகின் தான் சார்ந்த தனது சமூகத்திற்கு எதிராக அரங்கேற்றப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடிய ஒரு வீரன் தான் ஆஸ்மி .பொய்யான குற்றசாட்டுக்களின் பெயரில் அநியாயமாக பல ஆண்டுகளாக எந்த வழக்கு விசாரணையும் , ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சிறை கைதிகளுக்காக எந்த வித பண எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி பல அப்பாவி சிறைவாசிகளுக்கு விடுதலை பெற காரணமாக இருந்த உன்னத மனிதர்..

ஷாஹித் ஆஸ்மி ....... மும்பையில் பிறந்தவர் . இவரது சொந்த ஊர் உத்தர் பிரதேசத்தின் ஆசம்கர் ஆகும் இவர் மும்பையின் கோவிந்த் நகர் தொகுதி எம்எல்எவான அபு அசிம் ஆஸ்மியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது ..இவரது 14 ஆம் வயதில் பாபரி மஸ்ஜிதை பயங்கரவாதிகள் தரமட்டமாக்கியத்தை அடுத்து மும்பையில் ஏற்பட்ட கலவரத்தை காரணம் காட்டி போலீஸ் கைது செய்து பின்னர் விடுவித்தது ..இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் பிரதேசத்தில் குறைந்த காலம் பயிற்சி பெற சென்று பின்னர் விருப்பமில்லாமல் சிறிது காலத்திலேயே திரும்பிவிட்டார்.. ..
இது குறித்து ஆஸ்மி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் மும்பை கலவரத்தின் போது போலீஸார் முஸ்லிம் சமூகத்தை கொடூரமாக கொன்றதை நான் நேரில் கண்ட சாட்சி நான் ..இந்த கோரமான சம்பவமே என்னை போராளியாக மாற தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்..பின்னர் மும்பையில் அரசியல்வாதிகள் மற்றும் மும்பை கலவர சூத்திரதாரியும் முக்கிய குற்றவாளியுமான பால்தாக்கரே உள்ளிட்ட பலரை கொல்ல திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்..பின்னர் சுப்ரீம் கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து அதிகமான நாட்கள் சிறையில் இருந்ததால் விடுதலை செய்தது..
இந்த காலகட்டம் தான் ஷாஹித் ஆஸ்மியை வழக்கரினராக மாற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது..திகார் சிறையில் இருந்த காலகட்டத்தில் அஞ்சல் வழியாக கல்லூரி படிப்பை முடித்தார்..பின்னர் சிறையில் இருந்து வெளியேறிய வுடன் மும்பையில் வழக்கரினர் படிப்பை முடித்தார்..பின்னர் மும்பையில் பல அப்பாவி முஸ்லிம்கள் பொடோ என்னும் பாஜக ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட எந்த வித ஆதாரமும் இல்லாமல் சிறையில் அடைக்கும் கொடூர சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக மேலும் பல வழக்குகளில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக போராடினார்..
இவரின் முதல் வெற்றி என்பது 2002 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்த காட்கோபர் பேரூந்து குண்டு வெடிப்பில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட ஆரிப் பான்வாலா என்னும் நபரை பொய்யான வழக்கில் இருந்து விடுதலை செய்தது தான்..இது போக மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு 2006 ஆம் ஆண்டு அவரங்காபாத் ஆயுத கடத்தல் வழக்கு , 2006 ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு , இன்னும் 7/11 மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குண்டு வெடிப்பு வழக்குகளில் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அநியாயமாக கைது செய்யப்பட்ட பல அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைகாக போராடியவர்...
இவரது 7 வருட வழக்கரினர் வாழ்கையில் கிட்டத்தட்ட 17 அப்பாவி சிறைவாசிகளுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தவர்.. இது போக மும்பை தாக்குதல் 26/11 தாக்குதலில் வழக்கில் தீவிரவாதி என்ற போர்வையில் கொல்லப்பட்ட பாஹித் அன்சாரியின் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றசாட்டை எதிர்த்து உட்ச நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உட்ச நீதி மன்றம் அவரை அனைத்து வழக்குகளில் இருந்தும் நிரபராதி என்று 19 - ஆகஸ்ட் 2012 ஆம் ஆண்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது ..
தொடர்சியாக அப்பாவி மக்களுக்காக போராடிய ஷாஹித்துக்கு எதிராக பல மிரட்டல்கள் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளிடம் இருந்து வந்து கொண்டே இருந்தது..ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அப்பாவி மக்களின் விடுதலைக்காக தொடர்சியாக குரல் கொடுத்து வந்த சாஹித் ஆஸ்மி பிப்ரவரி 11 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டு தனது 32 ஆம் வயதில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்..
இவரது கொலைவழக்கு தொடர்பாக சில ஹிந்துத்துவ பயங்கரவதிகள் கைது செய்யப்பட்டாலும் கூட வழக்கம் போலவே நீதி எட்டாக்கனியாகவே சாஹித்தோடு சேர்ந்து புதைந்துவிட்டது..
வழக்கு நீதிமன்றத்தில் நடை பெற்ற காலகட்டத்தில் ஷாஹித்தின் கொலை வழக்கிற்காக வாதாடிய வழக்கரினர்.. ஷாஹித்துக்கு பல கொலைமிரட்டல்கள் தொலைபேசி மூலமாக வந்ததாக குறிப்பிட்டார் ..இதை ஆய்வு செய்த போது இந்த மிரட்டல்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்தது கண்டறியப்பட்டது....இருந்தும் கூட குற்றவாளிகளை கைது செய்த பாடில்லை ..மாறாக கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவரான வினோத் விசார் சொந்த ஜாமீனில் ஜூலை - 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்..
அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி அதற்காகவே மரணமடைந்த இந்த வீரனை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..தான் மட்டும் சுகமாக வாழ்தால் போதும் என்று நினைக்கும் இந்த உலகில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறையில் வாடிய பல அப்பாவிகளின் விடுதலைக்காக போராடிய இவரை போன்றவர்கள் தான் உண்மையான மனிதாபிமானிகள்..
நாம் மட்டும் சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணமுள்ள நாம் என்று நமது குழந்தைகளை வழக்கரினராக அல்லது பத்திரிக்கயாளராக மாறவேண்டும் இந்த சமூகத்தின் அநீதிக்கெதிராக போராட வேண்டும் என்று என்று நினைகிறோமோ அன்றுதான் நமது நோக்கத்தில் சத்தியத்தில் வெற்றி பெறமுடியும்..அதற்கு நமக்கு தேவை தியாகம் மட்டுமே..இறைவன் நாடினால் சாஹித்தை போன்ற பல நல்ல உள்ளங்களை உருவாக்குவோம்..
குறிப்பு ..
இவரது தியாகத்தை சத்தியத்திர்கான போராட்டத்தை மைய்யபப்டுத்தை ஷாஹித் Shahid (2013) என்ற பெயரில் ஹிந்தியில் ராஜ் குமார் யாதவ் என்பவரால் படம் எடுக்கப்பட்டது..முடிந்தால் இந்த படத்தை பாருங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக