மாணவனின் கன்னத்தைக் கிள்ளி தண்டித்த ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த மாணவன் ஒருவனின் கன்னத்தை, அவனது வகுப்பு ஆசிரியை மெஹருன்னிசா பலமாக கிள்ளி தண்டித்துள்ளார்.
இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டதில், மாணவனுக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து ராம்கௌரி, தனது மகனின் மாற்று சான்றிதழை தருமாறு கேட்டு பள்ளி நிர்வாகத்தை அணுகினார். ஆனால் மாற்று சான்றிதழை கொடுக்காமல், பள்ளி நிர்வாகம் அவரை அலைகழித்தது. இதனிடையே மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் திருப்தி அடையாத ராம்கௌரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ராம்கௌரிக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் ராம்கௌரி. அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் நீதிபதி சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவனைத் துன்புறுத்திய ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். அதே சமயம் ஆசிரியை மீதுள்ள குற்றவியல் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக