அஸ்ஸலாமு அலைக்கும் நரகம் எப்படி இருக்கும்:
நரகத்தில் காபிர்கள் முதலில் நுழைவார்கள். அதன்பின் முஹ்மின்களில் பாவிகளும் அவர்களின்பின் நயவஞ்சர்களும் நுழைவர். மனிதரில் ஒவ்வொரு 1000 த்திலும் 999 பேர் நரகம் நுழைவர்.
நரகத்திற்கு எழு வாசல்கள் உள்ளன. அதன் நெருப்பு இவ்வுலக நெருப்பை விட எழுபது மடங்கு கடுமையானதாகும். அதில் நுழையும் காபிரின் உடம்பு வேதனையை அனுபவிப்பதற்காக அது பிரம்மாண்டமாக மாறும். அவனது இரு தோள் புஜங்களுக்குமிடையிலான தூரம் மூன்று நாட்கள் நடந்து செல்லும் தூர அளவும், அவனது பல் உஹது மலையளவுமாக இருக்கும். அவனது தோல் கனத்து தடிப்பானதாக மாறும். வேதனையை அனுபவிப்பதற்காக அது மீண்டும் மீண்டும் மாற்றப்படும்.
நரகவாசிகளின் குடிப்பு குடல்களை எல்லாம் துண்டாக்கி விடும் அளவு கடும் சூடான நீராகும்.
அவர்களுக்கு உணவாகக் கிடைப்பது நரகத்துக் கள்ளி மரமும், நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும் சீழும்.
நரகில் மிகக் குறைந்த வேதனை உள்ளவனின் நிலை எப்படி எனில் அவனது இரு பாதங்கள் கீழும் நரக நெருப்பின் இரு தணல் கட்டிகள் வைக்கப்படும். அதன் சூட்டினால் அவனது மூளை கொதிக்கும்.
நரகிலே தோல்கள் பழுக்கும் வரை வேதனை கொடுக்கப்படும். மேலும், ஈயம் உருக்கி ஊற்றப்படுதல், நெருப்பின் சூட்டினால் முகம் பொசுக்கப்படுதல், நெருப்பில் இழுத்து செல்லப்படுதல், சங்கிலிகள், விலங்குகள் போன்றவற்றால் கட்டப்படுதல் ஆகிய வேதனைகளும் உள்ளன.
நரகம் மிகவும் அழமானதாகும். நரகக்குழியில் அன்று பிறந்த ஒருவனை வீசப்பட்டால், அவன் அடிப்பகுதியை சென்றடைவதற்கு 70 வருடங்கள் செல்லும்.
கற்களும் காபிர்களும் அதன் எரிகொல்லிகளாகும். அதன் காற்று சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போன்றது. அதன் நிழல் கருத்த புகையாகும். அதன் உடை நெருப்பாகும். அது அதில் வீசப்படும் அனைத்தையும் ஒன்று விடாமல் சுட்டெரித்து விடும். கோபாவேசத்தோடு சப்தத்துடன் அது எரியும். அதன் சூட்டினால் தோல்கள் பொசுங்கிவிடுவதுடன் அதன் உஷ்ணம் எலும்புகள் வரை போய் இதயங்களையும் தொட்டு விடும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்திலிருந்து காப்பானாக !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக