Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 9 நவம்பர், 2014

படித்ததில் பிடித்தது ...

இந்தியாவில் முஸ்லிம் சமுகத்திற்கு மத்தியில் பல இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள் தற்போது உருவாகியுள்ளது.அவ்வகையில் அவைகள் அனைத்தும் சுதந்திரம் கிடைக்க பெற்ற காலத்திலிருந்தே வந்த கட்சி,இடைப்பட்ட காலங்களில் உருவாகிய கட்சி,தன்னையும் அடையாளபடுத்த வேண்டும் என்பதற்காக உருவாக்கபட்ட கட்சி,தற்போது உருவாக்கபட்ட கட்சி,நாளை உருவாக்கலாம் என நினைத்து கொண்டிருக்கும் கட்சி என பல வகையான கட்சிகளும்
இயக்கங்களும் உருவாகி கொண்டிருக்கின்றன.இத்தகைய கட்சிகளுல் சுதந்திரம் கிடைத்து ஒரு சில வருடங்கள் மட்டும் கேட்கபட்ட சமுக அக்கறை,அவர்களுக்கான உரிமை பற்றிய பேச்சுக்கள் தற்போது நம்முடைய காலத்தில் மீண்டும் கேட்க துவங்கியுள்ளது.ஆரம்பத்தில் கேட்ட சமுக அக்கறை இடைப்பட்ட காலங்களில் ஒலிக்க மறந்து இப்போது மட்டும் ஒலிக்க காரணம்.இடைபட்ட காலங்களில் ஏற்பட்ட சில சுயநலவாதிகளின் வியாபாரத்திற்கு சமுக அக்கறையும் விற்கபட்டதே காரணமாக அமைய பெற்றது.தற்போது சமுகம்,சமூகத்திற்கான விடுதலை என்பதை உயிர் மூச்சாக கொண்ட உண்மையான சமுக அக்கறை கொண்டவர்கள் களத்தில் நிற்கும்போது சுயநல வியாபாரிகளுக்கும் ஓர் நிர்பந்தம் ஏற்பட்டு தானும் சமூக அக்கறை கொண்டவர்கள்தான் என்று நடிக்க முற்படுகின்றனர்.அதன் வெளிப்பாடுகள்தான் காலம் காலமாய் இருந்த பழைய கட்சிகள் திடீரென சமுக அக்கறையுடன் பேசுவது.பாராளுமன்றங்களில் வீர முழக்கங்களை ஏற்படுத்துவது இன்னும் பல காரியங்களை குறிப்பிடலாம்.அவ்வகையில் அக்கட்சிகள் வளர்வதை நாமும் சேர்ந்து ஊக்குவிக்கலாம் ஆனால் ஏமாற கூடாது என்ற விழிப்போடு.அவர்கள் தன் கட்சிகளை தேசம் முழுவதும் வளர்க்கலாம் அண்டை மாநிலங்களில் வளர்க்கலாம் யாரும் தடை போட முடியாது.ஏனென்றால் எத்தனை கட்சி வந்தாலும் யார் உருவாக்கினாலும் அவர்களை தோளில் வைத்து உயர்த்திவிட எங்கேயாவது ஒரு கூட்டம் நம் சமுகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.மீண்டும் சுயநலவாதிகள் உருவாக்கபடாமல் சமுக அக்கறை கொண்டவர்களை உருவாக்குவது நமது சமுகத்திற்காக நாம் செய்யவேண்டிய கடமை என்பதனை நாம் மறந்து விட வேண்டாம்.ஆகவே உன் கட்சி பெரியதா என் கட்சி பெரியதா என்ற சண்டை நமக்கு முக்கியமல்ல.ஒடுக்கபட்டவனும் தாழ்த்தபட்டவனும் அநீதம் இழைக்கபட்டவனும் உரிமைகள் முடக்கபட்டவனும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே நமக்கான நோக்கமாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக