மனிதர்களின் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கு பிறபொருள் எதிரிகள் (ஆன்டிபாடி)எனும் புரதம் எவ்வாறு உதவு கிறதோ அதேபோன்று மனித உடலில் உள்ள நானோ உயிரிகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகின்றன என்று ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் மனித உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற திரவங்களில் உள்ள நானோ உயிரிகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்ட னர். அப்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நானோ உயிரிகள் பயன்படும் என்று கண்டறியப்பட்டது.
மேலும், மேற்கண்ட புரதத்தில் பெரிய அளவுகளில் மூலக்கூறுகள் இருக்கின்றன. அதனால் நோய்த்தொற்று இருக்கும் குறுகிய இடங்களில் சென்று தன்னுடைய சேவையைச் செய்ய முடியாது. ஆனால் நானோ உயிரிகள் அத்தகைய குறுகிய இடங்களிலும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
நன்றி தமிழ்இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக