சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சமூக
நீதியாளர்களை பேரதிர்ச் சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு சமூகத்தின் உண்மை யான மக்கள் தொகையை கண்ட றிந்து, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சமூக நீதியாகும். எனவே இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட, அரசியல் சாசன சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக