Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 29 நவம்பர், 2014

அந்த பயில்வானும் இதைத்தானே செய்தாரு?

கருப்பு நிறக் குச்சிகள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோல்கேட் நிறுவனம். அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக் குச்சிகள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.
இதே கோல்கேட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் திரையிடப்பட்டு வந்தது.
ஒரு பயில்வான் அதிக எடையைத் தூக்கி பலத்த கைதட்டலுடன் பரிசு வாங்குவார். அவ்வளவு எடையைத் தூக்கிய அந்த பயில்வான் ஒரு சாதாரண சோளக்கதிரைக் கடிக்கும் போது பல் வலியால் துடிப்பார். அதிலிருந்து மீள்வதற்கு, கரித்தூளும் உப்பும் கலந்த கலவையால் பல்துலக்கத் தயாராவார் பயில்வான். அப்போது ஒரு குரல் ஒலிக்கும்.
“உடம்புக்கு பாலும் பாதாமும். பல்விளக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும். உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத் பவுடரும், டூத் பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன் தரக்கூடியவை என்றும் விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது. இதைத்தானே அந்த பயில்வானும் செய்தார்?
பெருநிறுவனப் பயில்வான்களிடம் உண்மையான பயில்வான்களே ஏமாறும்போது விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களை வாங்கும் சாதாரணமானவர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?
டாக்டர் இ.இராமச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக