Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 6 நவம்பர், 2014

ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும்! - ஆய்வறிக்கை!

ஷிப்ட் முறையில் பணியிடங்களில் வேலை செய்யும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை திறன் குறைந்துபோக வாய்ப்புள்ளதாக பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில் ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்களின் மூளை திறனை விட தினமும் ஒரே முறையான நேரத்தில் பணிபுரியும் நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை செயல்திறன் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்களின் உடல்நிலையில் உண்ணும், உறங்கும் நேரங்கள் மாற்றமடைவதால் அவர்களுக்கு இதயம், மூளை சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் எனவும், சில சமயங்களில் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
3000 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட அறிவாற்றல் வேகம் சார்ந்த சோதனையில் பலர் தேர்ச்சி அடையவில்லை என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டவ்லோஸி மற்றும் ஸ்வான்ஸி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், ‘முறையற்ற ஷிப்டுகளில் 10 ஆண்டுகாலமாக பணிபுரிபவர்களின் அறிவாற்றல் திறன் 6.5 ஆண்டுகள் பின்தங்கியதாக உள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காலை, மதியம், இரவு நேர ஷிப்டுகளில் மாறி மாறி பணிபுரியும் நபர்களுக்கு எவ்வாறு அறிவாற்றல் திறன் குறைகிறது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாத நிலையில், அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக