Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 நவம்பர், 2014

இந்தியாவின் சூப்பர் ரிச் பணக்காரர்களுக்கு 1.5% சொத்துவரி விதித்தால் நாட்டின் ஏழ்மையை மாற்ற முடியும்!

இந்தியாவில் உள்ள சூப்பர் ரிச் எனப்படும் பெரும் பணக் காரர்களுக்கு சொத்து வரியாக 1.5 சதவீதம் வசூலிப்பதன் மூலம் வறுமை நிலையில் உள்ள 9 கோடி பேரின் ஏழ்மை நிலையை மாற்ற முடியும் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா நிறுவனம் (Oxfam India) வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆக்ஸ்ஃபாம் இந்தியா நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி நிஷா அகர்வால் தெரிவிக்கையில்; 1990 ஆம் ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2 ஆக இருந்தது, அது 2014-ம் ஆண்டில் 65 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையில் சொத்து வரி விதித்தால் அதன் மூலம் 9 கோடி பேரின் வறுமை ஒழியும் என்கிறார்.
நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான நேரடி அந்நிய முதலீடு அனைத்துமே வரி விலக்கு பெற்று செய்யப்படுகிறது. அத்துடன் அரசு ராணுவத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக அளவில் செலவிடுகிறது. ஏழை, பணக்காரர்கள் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஒதுக்கப்படும் நிதி வரி சலுகைகள் மற்றும் பொதுத் துறை தனியார் முதலீட்டுத் திட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்நிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும். அதேபோல பெரும் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதே போல சர்வதேச நிறுவனங்கள் உரிய வரியை செலுத்துகின்றனவா என்று கண்காணிப்பதோடு, தனி நபர்கள் உரிய வரியை செலுத்துகின்றனரா என்றும் கவனிக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக