Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 ஜூலை, 2012

களவாணி ரேஷன் கடைகாரனுக்கு ஆப்பு வைக்கலாம் வாங்க…!


ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ”உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” ஓர் இலகுவான முறையை 
அறிமுகப்படுத்தியுள்ளது.
முறை:
உங்கள் மொபைல் போனில் [PDS] இடைவெளி [மாவட்ட குறியீடு] இடைவெளி [கடை எண்] என டைப் செய்து 9789006492 என்ற எண்னுக்கோ அல்லது 9789005450 என்ற என்ணுக்கோ எஸ்.எம்.எஸ். பண்ணுங்க.
மாவட்ட இலக்கம், கடை இலக்கம் என்பவற்றை உங்கள் ரேஷன் கார்டில் இருந்து அறிந்துகொள்ள வழிமுறை படத்தில் உள்ளது.
என்ன… களவாணி ரேஷன் கடைக்காரனுகளுக்கு ஆப்பு வைக்க ரெடியா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக