ஞாயிறு, 31 மே, 2015
ரூபாய் நோட்டிலிருந்தும் துரத்தப்படுகிறாரா காந்தி?
விஜயவாடா: மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத 10 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தற்போது இடம் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2ல் க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை துவக்கி விடுமுறையை நீக்கிய பாஜக அரசு, தற்போது ரூபாய் நோட்டிலிருந்தும் அவரை நீக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய அளவில் போராட்டம்: கேம்பஸ் ஃ ப்ரண்ட் உட்பட 11 மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை!
சென்னை: சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வாசகர் வட்டம் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக ஐஐடி நிர்வாகம் நீக்காவிட்டால் தேசிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.
வெள்ளி, 29 மே, 2015
மியான்மரில் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்ற புத்த துறவி !
பர்மா: இன்று மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிதான், இவர் 14ம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இசுலாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான், ஏனேனில் பர்மாவின் வியாபாரமும் , செல்வமும் இசுலாமியர்களை நம்பியே இருக்கிறது ,
புத்தம் போதிக்கும் யுத்தம்..!
பர்மா தற்போது மியான்மர் என அழைக்கப்படும் இந்த தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் இயற்கை வளம் மிக்க நாடு. இருந்த போதிலும் நிலையான அரசியல் சூழலின்மையாலும் உள்நாட்டு போர்களாலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவே விளங்குகிறது.
புதன், 27 மே, 2015
செவ்வாய், 26 மே, 2015
தமிழ் இசுலாமிய வரலாறு - பண்பாட்டு வேர்களை தேடி...
ஆர்.எஸ்.எஸ் தனது கைப்பாவையான மோடியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த பின்பு இந்திய வரலாற்று ஆவணங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. புராணங்களில் வரலாறுகளைத் தேடும் பிற்போக்கான வரலாற்று ஆய்வாளர்கள் மூலமாக இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் ரகசியமாக நடந்து வரும் இந்த வேலையின் ஊடாக இந்திய சமுகத்தில் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறுகள் முற்றிலும் திரிக்கப்பட்டு பார்ப்பனியமயமான வரலாறு வளரும் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால்
நமது பிதமர் அனுபவம் ...
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன் 20.5.2014 அன்று நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக வந்த மோடி, அதன் வாயிற்படியைத் தன் தலையால் தொட்டு வணங்கினார். உள்ளே அடக்கமே உருவாக அமர்ந்திருந்தார். 87 ஆண்டுகள் பழமையான அந்த அரங்கில், பிரதமராக முடி சூட்டிக்கொள்ளப் போகிறோம் என்பதால் உணர்ச்சிமயமாகக் காட்சி தந்தார். அத்வானியின் பாராட்டுரைக்கு நன்றி தெரிவிக்கும்போது அவருடைய நா தழுதழுத்தது. பார்க்க எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
திங்கள், 25 மே, 2015
நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? – வி. களத்தூர் ஃபாரூக்
நம்முடைய சமூகத்தில் இன்று பல்வேறு கருத்துகளை (மட்டுமே) தெரிவிக்கக்கூடிய சகோதரர்கள் பெருகி வருகிறார்கள். முஸ்லிமாக சமூகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு, அதற்கான செயல்திட்டம் என்ன என்று அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் பேசுகிறார்கள். முகநூலிலே எழுதுகிறார்கள். அதன்படி செயல்படுகிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.
பெரும்பாலான சகோதரர்கள் எந்த அமைப்பிலும் அல்லது களத்திலும் இறங்கி செய்யக்கூடிய பணிகளில் கவனம் செலுத்துவது “தேவை இல்லாத வேலை” என்ற கருத்து உடையவர்களாக இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஒரு வரலாற்றுக் கடமை – 7
மகமதியரும் தீண்டாமை பாராட்டினர்!
நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்பவதாக, எங்கள் இயக்கத்தின் சக தோழர்கள் சிலர் 1934-ல் தெரிவித்திருந்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன்.
வெருலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப்பயண திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று.
வெருல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத். அவுரங்காபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும். இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது.
ஞாயிறு, 24 மே, 2015
மாகாராஷ்ட்ரா – மாட்டுக்கறி தடைக்கெதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது – மஸ்ஜித் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை
நந்தித் : மகாராஸ்டிர மாநிலம் திரங்கா காவல் நிலையத்தில் இருந்து மஸ்ஜித் சுமையா நிர்வாகத்திற்கு மாநில அரசு பிறப்பித்து இருக்கும் மாட்டுக்கறி உன்ன தடை சட்டத்திற்கு எதிராய் எந்த ஆர்பாட்டத்திலோ போராட்டத்திலோ மஸ்ஜித் தே சுமையா ஜமாஅத் அங்கத்தவர்கள் பங்கு பெறாமல் இருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை வந்ததை தொடர்ந்து, ஜமாஅத் தலைவர்களும் mim காங்கிரஸ்
தமிழக அரசியல் – வலை விரித்து நிற்கும் எத்தர்கள்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதும் ஒரு அரசியல் வெற்றிடம் தமிழகத்தில் உருவானது. அந்த வெற்றிடத்தை கவ்வ நினைத்த ஃபாசிச எத்தர்களும் அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கும் ஊடகமும் துரிதமாக களமிறங்கினார்கள். பா.ஜ.க வை பூதாகரமாக காட்டினார்கள். அ.தி.மு.க vs பா.ஜ.க என்றார்கள். இங்குதான் இவர்களின் சூட்சுமம் வெளிப்படுகிறது.
பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்ச நியாயமாக இந்த சூழ்நிலையில் தி.மு.க vs பா.ஜ.க என்றுதானே
ஒரு வரலாற்று கடமை – தொடர் 6
குதிரை வண்டியிலிருந்து விழுந்த அனுபவம்!
1929-ஆம் ஆண்டில் பம்பாய் அரசாங்கம் தீண்டத் தகாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து விசாரணை செய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டியில் நானும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒடுக்குமுறை, கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தக் கமிட்டி இராஜதானி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுவாகப் பிரிந்து பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிந்து பயணம் செய்ய முடிவு செய்தோம். எனக்கும் மற்றொரு உறுப்பினருக்கும் கண்மேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. நானும் என் சகதோழரும் எங்களது பணி முடிந்தபின் பிரிந்து சென்றோம். யாரோ ஓர் இந்து சாமியாரைக் காண அவர் சென்றார். பம்பாய் செல்ல நான் ரயிலில் புறப்பட்டேன்.
வியாழன், 21 மே, 2015
பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு 41 பேர் மாநில அளவில் முதலிடம்!
பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு வரலாற்று கடமை – தொடர் 5
பரோடா பார்சி விடுதியில் பட்டபாடு!
1916-இல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன். உயர் கல்விக்காக மேதரு பரோடா மன்னர் அவர்களால் நான் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன். 1913-முதல் 1917-வரை நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நான் பயின்றேன். 1917-இல் இலண்டனுக்குச் சென்ற நான் இலண்டன் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பயிலச் சேர்ந்தேன். ஆனால் என் கல்வியை முடிக்காமல் இடையில் இலண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் நிலை எனக்கு ஏற்பட்டது.
புதன், 20 மே, 2015
கடமை எங்கிருக்கிறதோ அங்கு அறிவும் இருக்கும் ....
நெருப்பு கங்குகளைக் கொட்டுவது போல, சூரியன் வெப்பக் கதிர்களை செலுத்திக் கொண்டிருந்தான். அதனால் பாலைப் பெருவெளி அனலாய் தகித்தது. சிதறிய வர்ணம் போல ஆங்காங்கே பச்சையும் சாம்பலுமாய் புற்களும், புதர்களும் முளைத்திருந்தன. மேய்ச்சலுக்கு அவற்றைத் தேடிச் சென்ற ஆடுகள் வெப்பமிகுதியால் மேலோட்டமாய் மேய்ந்தன. பிறகு அடுத்த புல்பரப்புக்கு அவசரம்... அவசரமாய் விரைந்தன.
பெரம்பலூர் MRF தொழிற்சாலையால் உருவாக்கப்போகும் அனல் மின்சார ஆபத்து ?..
பெரம்பலூர் அருகிலுள்ள நாரனமங்கலத்தில் MRF தொழிற்ச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது நடந்த கண்நீர்கதைகளை இப்பொழுது கூட அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை கேட்டால் நமக்கு நெஞ்சே வெடித்துவிடும்… நில உரிமையாளரான கணவன் வெளிநாட்டில் கூலி வேலை செய்யும்போது மனைவியை மிரட்டி “power of attorney” வாங்கி நிலத்தை பிடுங்கிய கதைகளெல்லாம் உண்டு.
அவ்வாறு MRF நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும்போது அரசு கூறிய மிகமுக்கியமான காரணம் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பதுதான். ஆனால் எந்தனை பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு வேலைகொடுத்தார்கள்
செவ்வாய், 19 மே, 2015
ஒரு வரலாற்று கடமை – தொடர் 4
விசாவிற்காக காத்திருகின்றேன்
எந்த மக்களுக்கு இடையில் பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப் உணர்வு பெற்று வீறு கொண்டு எழுந்தவர்கள் வாழ்த்துக்கு உரியவர்கள்
தன் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை தான் எழுதிய விசாவுக்காக காத்திருகின்றேன் என்ற கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கிறார் அம்பேத்கர்
இந்தியாவில் தீண்டாமை இருப்பதை அயல்நாட்டினர் அறிந்திருக்கக்கூடும். உண்மையில் அது எவ்வளவு அடக்கு முறை நிறைந்தது என்பதை அவர்கள், அடுத்த வீட்டில் இருந்தாலும், அறிந்து கொள்ள இயலவில்லை என்றே
வேலைக்காகுமா உங்கள் ரெஸ்யூம்?
நீங்கள் எதிர்பார்த்திருந்த வேலைக்கான நேர்காணல் நாளை நடக்கவிருக்கிறது. அதற்கான தகுதி படைத்தவராகவும் உள்ளீர்கள். உங்களுடைய கல்வி, அனுபவம், தனி விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ரெஸ்யூம் (resume) மற்றும் சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்துள்ளீர்கள். இவை மட்டும்போதும் என நினைக்கின்றீர்களா?
சமீபத்தில் நண்பர் ஒருவர் நேர்காணலுக்குச் சென்றார். பட்டப்படிப்பில் உயர்ந்த மதிப்பெண், நல்ல தொடர்பு ஆற்றல், புத்திக்கூர்மை இப்படிப் பல திறமைகள் கொண்டவர் அவர். அவரை நேர்காணல் செய்த நபர் அவருடைய ரெஸ்யூமை பார்த்தவுடன் சட்டென முகம் சுளித்தார். “team player, excellent communication skill போன்ற அரதப்பழசான வர்ணனைளைக் கை விடவே மாட்டீங்களா?” எனக் கேட்டார்.
முர்ஸி – ஆட்சி பீடம் முதல் , தூக்கு மேடை வரை ..!!!
சர்வாதிகாரத்தின் இராட்சத கட்டிடங்கள் ஆழமாக அஸ்திவாரம் போட்டபின் திமிறி எழும் ஒடுக்குமுறைக்கு எதிரான பெரும் போராட்டத்தை கண்ட பெருமை எகிப்திற்கு உண்டு . நவீன ஃபிர்அவ்னான ஹோஸ்னி முபாரக்கின் ஏறத்தாழ 40 ஆண்டுகால சர்வாதிகாரத்தின் ஆட்சி மூட்டை கட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்டதை உலகமே ஆரவாரமாய் கொண்டாடியது . சமூக மாற்றத்தில் களம் கண்ட முன்னணி இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமீன் சுதந்திரமான தேர்தலில் ஜனநாயக ஆட்சியை பிடித்தது . முஹம்மதுமுர்ஸி அதிபரானார் . அமெரிக்கா முதல் அண்டை நாடுகள் வரை வயிற்றில் புளியை கரைத்தாற்போல் ஆயிற்று .
திங்கள், 18 மே, 2015
உம்ரா முடித்து திரும்பியவர்கள் அபுதாபி அருகே விபத்தில் 3 இந்தியர்கள் மரணம் 53 பேர் படுகாயம்!
அபுதாபி: துபாயை சார்ந்த இந்தியக் குழு ஒன்று சவுதி அரேபியாவில் உம்ராவை முடித்து விட்டு சனிக் கிழமை அமீரகத்தை நோக்கி பேருந்தில் திரும்பி கொண்டிருந்த போது அவர்கள் பயணம் செய்த பேருந்து அல் குவைஃபாத் – அபுதாபி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது இதில் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்
அவசரமும், நிதானமும்!
இன்றைய அவசர உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இல்லை. எல்லாமே அவசரம். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற ஆவேசம். அதனை நிதானமாக செய்ய வேண்டும் என்ற பொறுமை இல்லை.
மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான் என்று அல்லாஹ் கூறுகிறான்: “மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17:11)
புரட்சியை தூக்கிலிட முடியாது !
சில தினங்களுக்கு முன்னால் எகிப்தில் ராணுவ ஆட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதிமன்றத்திலிருந்து வெளியான தீர்ப்பு யாரும் எதிர்பாராதது அல்ல.எகிப்தின் அதிகாரப்பூர்வ அதிபர் முஹம்மது முர்ஸி, உலகப் புகழ்பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி உள்ளிட்ட 120 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த புரட்சியில் 20 ஆயிரத்திற்கும்
ஞாயிறு, 17 மே, 2015
சனி, 16 மே, 2015
நக்பா – பலஸ்தீனின் துக்க தினம் ..!!
வரலாற்றில் இதே நாள் ..
1948 மே 15 முறைதவறி பிறந்த இஸ்ரேலின் பிறப்பு அமெரிக்காவின் அரக்கனால் உறுதி செய்யப்பட்ட தினம் .கொத்துக் கொத்தாக மண்ணின் மைந்தர்கள் விரட்டப்பட்டு , கொலை செய்யப்பட்டு அநியாயமாக புனித பூமியை அபகரித்துக் கொண்ட திட்டம் அது . உலகமே கண்ணை பளீரென திறந்து வைத்த நேரத்திலேயே அத்தகைய கொடூரமான ஆதிக்கம் அமையப் பெற்றது .
“ஃபலஸ்தீனம் ” உணர்வுப்பூர்வமான உள்ளார்ந்த சகோதரத்துவம் ஒன்று சேரும் இடம் . பல தீர்க்க தரிசிகளையும் , உயிர் தியாகிகளையும் தாங்கிய புனித பூமி.
ஆட்சிக்கும் , மக்களுக்கும் சூழ்ச்சி செய்து கலகத் தீ மூட்டி குளிர் காய்வதில் யூதர்கள் கைதேர்ந்தவர்கள் . கைதேர்ந்தவர்களின் கால்களும் சில
வியாழன், 14 மே, 2015
புதன், 13 மே, 2015
தொலைக்காட்சி சானல்கள், இணையதளங்களை கண்காணிக்கும் மத்திய அரசு!
புதுடெல்லி: மத்தியில் ஆளும் மோடி அரசு, 600க்கும் அதிகமான தொலைக்காட்சி சானல்களையும், நான்கு கோடி இணையதளங்களையும் கண்காணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு ஊடகப் பிரிவு கண்காணிப்பை நடத்துவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறுகிறது.
பிரதமர் அலுவலகத்திற்கு இப்பிரிவு தினமும் 5 அறிக்கைகளை அளித்து வருகிறது. புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1395 அறிக்கைகள்
இழந்த ஏழு வருடங்களை தருவது யார்?
நாடு முழுவதும் ஜிஹாதிய நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி பிப்ரவரி 2008ல் கர்நாடகா காவல்துறை 17 நபர்களை கைது செய்தது. தற்போது இவர்கள் நிரபராதிகள் என்று ஏப்ரல் 30 அன்று விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் யஹ்யா கம்முகுட்டி.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யஹ்யா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யஹ்யா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்.
செவ்வாய், 12 மே, 2015
திங்கள், 11 மே, 2015
கருத்துக்களை’ வரவேற்று! ‘வேறுபாடுகளை’ களைவோம்!! – வி. களத்தூர் ஃபாரூக்
இன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக இருப்பது கருத்து வேறுபாடுகளும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு இயக்கம் என சமூகத்தை பிரித்து விட்டார்கள். அதனால் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதை விட்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டு சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளை எப்படி களைவது? அதற்கு என்னதான் வழி?
இன்று அன்னையர் தினம்! – அப்துர் ரஸ்ஸாக்
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல் குர்ஆன் 31:14)
கர்ப்ப காலத்தில் ஒரே மாதிரியான துன்பத்தை ஒரு தாய் அனுபவிப்பதில்லை. மாறாக, பல மாதிரியான துன்பங்களை அனுபவிப்பார்.
சனி, 9 மே, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)