Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 24 மே, 2015

மாகாராஷ்ட்ரா – மாட்டுக்கறி தடைக்கெதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது – மஸ்ஜித் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை

நந்தித் : மகாராஸ்டிர மாநிலம் திரங்கா காவல் நிலையத்தில் இருந்து மஸ்ஜித் சுமையா நிர்வாகத்திற்கு மாநில அரசு பிறப்பித்து இருக்கும் மாட்டுக்கறி உன்ன தடை சட்டத்திற்கு எதிராய் எந்த ஆர்பாட்டத்திலோ போராட்டத்திலோ மஸ்ஜித் தே சுமையா ஜமாஅத் அங்கத்தவர்கள் பங்கு பெறாமல் இருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை வந்ததை தொடர்ந்து, ஜமாஅத் தலைவர்களும் mim காங்கிரஸ்
போன்ற அரசியல் கட்சி பிரமுகர்களும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரேம் ஜித் சிங் டாகியாவை சந்தித்து இந்த சுற்றறிக்கையை பிறப்பித்த திரங்கா காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் ரதூட்டுக்கு எதிராக புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் துறை ரீதியாக விசாரித்து தவறு இருக்கும் பட்சத்தில் துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மஸ்ஜீதே சுமையா நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இந்த சுற்றரிக்கையை இஸ்லாமிய சமூகத்தை பொது வெளியில் இருந்து தனிமைப்படுத்தும் மாநில பாஜக அரசின் சதிகளின் அங்கமாகவே இதை காண்பதாக தெரிவித்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் ரதூட் சுற்றிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
இந்த சுற்றிக்கை பிறப்பித்தற்கான காரணம் அரசியல் கட்சிகள் மஸ்ஜித்க்கு உட்பட்ட ஜமாத்தார்களின் உணர்வினை மாட்டுக்கறி தடை சட்டத்திற்கு எதிராக தூண்டிவிட கூடியடிய சாத்திய கூறுகள் இருப்பதால், நகரின் பொது அமைதியையை காத்திட எடுக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது என தெரிவித்தார்.
இவ்வாறு இந்த ஜமாஅத் நிர்வாகம் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஜமாஅத் அங்கத்தவர்கள் பொது அமைதியை கெடுத்த சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்தது உண்டா என்ற கேள்விக்கு அவ்வாறு எந்த நிகழ்வும் நடைபெற்றதில்லை என அவர் தெரிவித்தார்,
இந்திய குற்றவியல் சட்டம் செக்ஸன் 149 இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செக்ஷன் 149-ன் டி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தாலும் அது குறிப்பிட்ட ஒரு மஸ்ஜித் நிறுவாகத்திற்கு மட்டும் அனுப்பியது என்பது அந்த மஸ்ஜித் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கேந்திரமாக இருக்கிறது என்று மக்களின் பார்வையை உருவாகும் என்பதாலும், இதற்கு முன் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த சம்பவமும் நடந்திராத போதும் இந்த நடவடிக்கையை காவல்துறை முன்னெடுத்திருப்பது என்பது திட்டவட்டமாக முஸ்லிம்களின் கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தலாகவே காண வேண்டியுள்ளது என்று வழக்கறிஞர் அர்சத் கருத்து தெரிவித்தார்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சாவான் “மாநில பிஜேபி அரசு மதம் மற்றும் சமூக பிளவுகளை ஏற்படுத்த முனைவதாக குற்றம் சாட்டினார்”
மேலும் எதிர்மறையான சிந்தனைகளை சமூகத்தில் விளைவிக்க முனைவதாகவும் தெரிவித்துள்ளார்.

mim நகர தலைவர் அன்வர் ஜாவேத் இதை வன்மையாக கண்டிப்பதாகவும், அரசின் முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க எமக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கை இது என்றும் இன்று மாட்டுக்கறிக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கூறுபவர்கள் நாளை எமது உரிமைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடை பிறப்பிப்பார்கள். இது முஸ்லிம் சமூககத்தின் கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்க பட்டிருக்கும் நேரடி தாக்குதல் ஆகும் இத ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக