Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 மே, 2015

புரட்சியை தூக்கிலிட முடியாது !

சில தினங்களுக்கு முன்னால் எகிப்தில் ராணுவ ஆட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதிமன்றத்திலிருந்து வெளியான தீர்ப்பு யாரும் எதிர்பாராதது அல்ல.எகிப்தின் அதிகாரப்பூர்வ அதிபர் முஹம்மது முர்ஸி, உலகப் புகழ்பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி உள்ளிட்ட 120 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த புரட்சியில் 20 ஆயிரத்திற்கும்
அதிகமானோர் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.சிறையை உடைத்து வெளியே வர தூண்டினார்கள், ஈரானில் ஷியாக்கள் மற்றும் ஃபலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்துடன் இணைந்து எகிப்தை சீர்குலைக்க முயறித்தார்கள் என்பதே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோர் மீது சாட்டப்படும் குற்றங்கள்.தற்போது வெளியான தீர்ப்பு இறுதியானது அல்ல.அல் அஸ்ஹர் முஃப்தியின் கருத்தை கேட்ட பிறகு நீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும்.
ஆட்சியாளர்களின் நேசத்திற்குரியவர்கள் நீதித்துறையை அலங்கரிக்கும்போது இதற்கு அப்பால் எந்த தீர்ப்பையும் எதிர்பாக்க முடியாது.எகிப்தில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரே முஹம்மது முர்ஸி.ராணுவ தலைமை தளபதியாக இருந்த அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸியின் தலைமையில் நடந்த ராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே 2013 ஜூலை மாதம் முஹமம்து முர்ஸி அதிபர் பதவியில் இருந்து அநியாயமாக நீக்கம் செய்யப்பட்டார்.அடக்குமுறை அரசுகள் தங்களுடைய இங்கிதங்களுக்கு ஏற்ப இயங்காதவர்களை இத்தகைய தந்திரங்களை பயன்படுத்தி கவிழ்த்திருப்பதை வரலாற்றில் ஏராளம் காணமுடியும்.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஒழித்துக் கட்ட அவர்களுடைய தலைவர்களையும், செயல்வீரர்களையும் கைதுச் செய்து சிறையில் அடைத்தார்கள்.சொத்துக்களை முடக்கினார்கள்.கூட்டுப்படுகொலைகளையும் அரங்கேற்றினார்கள்.ஆனால், வரலாற்றில் பல கொடிய அடக்குமுறைகளை எதிர்கொண்ட தியாகத்தின் தடாகங்களாக செயல்படும் இஃவான்களை சீஸிக்களாலும், அவர்களுக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் துரோகிகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு மீண்டும் நிரூபிக்கத்தான் போகிறது இன்ஷா அல்லாஹ்!
ஜனநாயத்திற்கு விரோதமான வழிமுறையின் ஊடே முர்ஸியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தேர்தல் நாடகம் மூலம் அதிபரான சீஸியின் அரசு, ஜனநாயகரீதியான போராட்டங்களை ஒடுக்குவதற்கு கொடூரமான முறைகளை கடைப்பிடித்து வருகிறது.ஒரு மாதம் முன்பு இன்னொரு வழக்கில் முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.ராணுவ அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நீதித்துறையை அவமானப்படுத்தி, மக்களின் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.முர்ஸிக்காக ஆஜராக ஒரு வழக்கறிஞரையும் அனுமதிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆம்னஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இந்த காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பை கண்டித்துள்ளன.அரசு கஜானாவை கொள்ளையடித்து, அராஜக ஆட்சியை நடத்திய ஹுஸ்னி முபாரக்கின் நடவடிக்கைகள் எதுவும் எகிப்திய நீதிமன்றங்களின் கண்களில் குற்றமாக தெரியவில்லை.அனைத்து நாடுகளிலும் அங்கு வாழும் குடிமக்களுக்கு இறுதி கட்ட நம்பிக்கையாக அமைவது நீதிமன்றங்களே.அந்த நம்பிக்கையை இத்தகைய கொடிய தீர்ப்புகள் மூலம் எகிப்திய நீதிமன்றங்கள் தகர்த்துள்ளன.
அல் அஸ்ஹர் முஃப்தியின் கருத்திற்கு பிறகு இறுதி தீர்ப்பின் மூலம் எகிப்தில் தூக்கு மரங்கள் எழலாம்.ஃபிர்அவ்னை எதிர்த்து போரிட்ட நைல் நதியின் தேசத்திற்கு இது ஒன்றும் புதிய செய்தி அல்ல.ஏகாதிபத்தியவாதிகளும், சர்வாதிகாரிகளும் புரட்சியின் நாயகர்களை தூக்கிலிடலாம்.ஆனால், புரட்சியை ஒருபோதும் தூக்கிலிட முடியாது.அது ஒரு நாள் கிளர்ந்து எழுந்து இவர்களை ஒழித்துக்கட்டும்.ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டது போல!
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக