Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 19 மே, 2015

முர்ஸி – ஆட்சி பீடம் முதல் , தூக்கு மேடை வரை ..!!!

சர்வாதிகாரத்தின் இராட்சத கட்டிடங்கள் ஆழமாக அஸ்திவாரம் போட்டபின் திமிறி எழும் ஒடுக்குமுறைக்கு எதிரான பெரும் போராட்டத்தை கண்ட பெருமை எகிப்திற்கு உண்டு . நவீன ஃபிர்அவ்னான ஹோஸ்னி முபாரக்கின் ஏறத்தாழ 40 ஆண்டுகால சர்வாதிகாரத்தின் ஆட்சி மூட்டை கட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்டதை  உலகமே ஆரவாரமாய் கொண்டாடியது . சமூக மாற்றத்தில் களம் கண்ட முன்னணி இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமீன் சுதந்திரமான தேர்தலில் ஜனநாயக ஆட்சியை பிடித்தது . முஹம்மதுமுர்ஸி அதிபரானார் .  அமெரிக்கா முதல் அண்டை நாடுகள் வரை வயிற்றில் புளியை கரைத்தாற்போல் ஆயிற்று .

இஸ்ரேலுக்கோ ஜன்னியே வந்துவிட்டது . விடுவார்களா ஃபிர்அவ்னின் தம்பிகளும் , சந்ததிகளும் எகிப்தின் ஆட்சியைக் களைக்க கீழருப்பு வேலைகளை துரிதப்படுத்தினர் .
ஏகாதிபத்தியத்தின் கால்களை நக்கிப் பிழைப்பதற்கென்றே சொற்ப நபர்கள் இருக்க வேண்டுமென்பது நியதியாகிவிட்டது. எகிப்து மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன..?
ஹோஸ்னி முபாரக்கின் விசுவாசியான அப்துல் பத்தாஹ் சீசி மிகப் பொருத்தமானவராய் தேர்ந்தெடுக்கப்பட ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா. ஜனநாயகத்தின் குரல்வளையை அறுத்ததில் ஏகாதிபத்தியத்திற்கு பெரும் பங்குண்டு .

அநியாயமாக ஆட்சியைப் பிடித்துக்கொண்டு கொள்ளைப்புறத்தில் அமெரிக்காவின் உதவியோடு ஆட்சியை தொடங்கினார் சீசி. முர்ஸி கொண்டு வந்த அத்துனை திட்டங்களையும் ரத்து செய்தார்.
முர்ஸி உட்பட இஹ்வானுல் முஸ்லிம்களின் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர், இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தடைசெய்யப்பட்டது. எகிப்தின் சர்வாதிகார சீசியின் அரசைக் கண்டு கொதித்தெழுந்து மக்கள் வீதிகளில் போராட துவங்கினர். ராபியா மைதானத்தில் பெண்களும், குழந்தைகளும்கூட களத்தில் நின்றனர் . சீசியின் அராஜக அரசு கண்மூடித்தனமாக நடந்து கொண்டது. ராபியா மைதானம் முழுக்க பெண் சுஹதாக்களின் இரத்தம் ஓட்டப்பட்டது. அமெரிக்காவோ, ஐநாவோ கூட கண்டிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான அந்நூர் கட்சியும் மௌனியாக நின்று போராட்ட முறை தவறு என தன் பங்கிற்கு விஷமத்தை கக்கியது .
பலகட்ட போராட்டங்கள், சஹீத்கள் என எகிப்தே சோகத்தில் மூழ்கிய நேரத்தில் கடந்த வாரம் எகிப்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. எகிப்தில் பெரும்பான்மை மக்களால் தற்பொழுது வரை எகிப்தின் ஜனாதிபதி என்று நம்பப்பட்டு வரும் முஹம்மது முர்ஸிக்கு தூக்கு தண்டனை என்பதே அவை. ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை அநியாயமாக தூக்கிலிட நியாயமான காரணிகள் இருக்க வேண்டுமல்லவா …??  அப்படி எந்தவொரு மண்ணாங்கட்டி காரணத்தையும் சர்வாதிகார சீசியின் அரசு சமர்ப்பிக்கவில்லை. சீசி சமர்ப்பித்த காரணங்கள் அமெரிக்க , இஸ்ரேல் சார்புடையவை என்பது மட்டும் தெள்ளத்தெளிவு.
ஃபலஸ்தீனின் ரஃபா எல்லையை திறந்து ஃபலஸ்தீன மக்களுக்கு உதவி செய்ததும், ஹமாஸ் போராளிகளை சிறைகளிலிருந்து விடுவித்ததும் முர்ஸி செய்த மிகப்பெரிய குற்றங்களில் ஒன்று  என எகிப்து நீதிமன்றம் விசாரித்து தூக்கு தண்டனையை பரிசளித்தது. இது ஒருபுறமிக்க முர்ஸி திறந்த ரஃபா எல்லையை இழுத்து மூடி ஃபலஸ்தீன மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவித்திருக்கிறது சீசியின் அரசாங்கம். மேலும் ஹமாஸ் பல வருடங்களாக திரட்டிய பொருளாதாரத்தில் உடல் உழைத்து அமைத்த போர் உத்திக்கான பதுங்குகுழிகளையும் சீசியின் இராணுவம் தேடித்தேடி அழித்துள்ளது. அகம் , புறம் என எங்கு நோக்கினும் அமெரிக்க-இஸ்ரேலின் இரத்த வாடை சீசியின் விசுவாசத்தில் கலந்து நாற்றமெடுக்கிறது .
ஃபலஸ்தீன மக்களுக்கு உதவி செய்தல் பெருங்குற்றம் எனில் ராபியா மைதானத்தில் இஸ்லாமிய பெண்கள் உயிர்நீத்ததும், அஸ்மா பெல்தாகி போன்ற பல முஜாஹிதாக்களது உயிர்கள் பலியிடப்பட்டதற்கும் யார் பொறுப்பேற்பது ..?? எகிப்திய குடிமக்களது உயிர்களை பலிவாங்கிய சீசிக்கு தூக்கு தண்டனை அளித்து விடலாமா …???
அடிமைகளாய் அண்டிப் பிழைக்கும் முட்டாள்களின் குரூரமான தீர்ப்பே இத்தகைய தூக்கு தண்டனை .
முர்ஸி கலங்கிவிட்டாரா இத்தீர்ப்பைக்கண்டு …???? எகிப்தின் கெய்ரோ நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் ஒருமித்த குரலில் சொல்வார்கள் “முர்ஸியை அல்லாஹ் தேர்ந்தெடுத்துவிட்டான்”என . முர்ஸியை வளர்த்த பாசறை அத்தகையது . சிறைகளும், தூக்குகளும் இல்லாமல் ஈமானிய உறுதியை பெற முடியாது என ஆழமாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இஹ்வான்கள். இதைப்போன்ற பலநூறு துன்பங்கள் அவர்களை கடந்து சென்றிருக்கின்றன. கஷ்டத்துடன்தான் இலேசு உள்ளது என மன உறுதி கொள்ளும் கொள்கைக் கூட்டத்தை இஹ்வான்களிடம் காணலாம். குர்ஆனிய வசனங்களால் நெஞ்சுறுதி கொண்டு அசத்தியத்தியத்திற்கு எதிராய் போராடும் போராளிகளுக்கு மத்தியில் முஹம்மது முர்ஸியோ முழுக்குர்ஆனை மனனம் செய்த எகிப்தின் முதல் ஜனநாயக ஆட்சியாளர் .
இஹ்வான்கள் மிகச் சிரமப்பட்டு பல கள பலிகளை கொடுத்து தன் இலட்சியத்தில் முன்னேறிய கணம். சலபிக்களின் கட்சியான அந்நூர் அவதூறுகளை அள்ளி வீசியது . தற்பொழுது முர்சிக்கு தூக்கு என்றதும் முர்ஸி தவறிழைத்துவிட்டார், முர்ஸி அப்படி செய்திருக்கலாமே என்கிற பாணியில் அக்கறையற்ற அறிவுரைகளை போகிற போக்கில் தெளித்து விட்டு செல்கின்றனர்.
ராபியாவில் பலவீனமான பெண்களின் இரத்தம் ஓட்டப்பட்டபோது மௌனியாக நின்று கண்டிக்க வக்கற்றவையாக வேடிக்கை பார்த்ததை உலகம் மறந்துவிடவில்லை .

முர்ஸியின் தூக்கு தண்டனையை கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஒரேயொரு அரபு நாடு துருக்கி மட்டுமே. முர்ஸியின் தண்டனையை திரும்பப் பெறாவிடில் எகிப்துடன் எந்த உறவும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ள துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்துகானின் துணிச்சல் மெச்சத்தக்கது. உலக அரபு நாடுகளின் மௌனத்தை அமெரிக்க அடிமை மனைவிகளின் தரத்திலேயே எடுத்துக்கொள்ள முடியும் .

அநியாயக்கார ஆட்சியாளனை பெற்றிருக்கும் தேசம் வெட்கக்கேடானது எனில் அதனை ஆதரிக்கும் பக்குவம்படைத்த அரபு இறக்குமதிகளின் பேச்சுக்கள் துரதிர்ஷ்டவசமானது. எங்கு நோக்கினும் அரபு நாடுகளில் சம்பிரதாயத்திற்கு கூட அமைதியைக் காண இயலாது. காலாணியாதிக்கத்தின் துருப்புகள் ஆங்காங்கே குடிசைபோட்டு தீவிரமாக செயல்படுவார்களெனில் அமைதியை அமெரிக்காவிடமிருந்தே கடன்பெற வேண்டியிருக்கும் .
ஒருபுறம் ஃபலஸ்தீனில் அநியாயமாக ஆக்கிரமித்துக் கொண்ட நாட்டினை மீட்பதற்கான போராட்டங்களும், சிறைகளும், தூக்கு கயிறுகளுமென என நடந்து கொண்டிருக்க மறுபுறம் அநியாயமாக ஆட்சியை பிடித்துக்கொண்ட சர்வாதிகார ஆட்சியிலிந்து சுதந்திரமடைய பாரிய போராட்டங்களும், சிறைகளும், தூக்கு கயிறுகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன .
எங்கோ நடக்கிறது இதற்கும் அமெரிக்காவா என மெத்தப்படித்த (மூ)மே(தே)தாவிகள் கேட்கலாம். எதார்த்தங்களும், சூழ்ச்சித் திட்டங்களும் உலக ரவுடிகளின் கரங்களில் அல்லவா சிக்கிக் கிடக்கிறது .
இத்தருணத்தில் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளரான புரட்சியாளர் “சே” வின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ” உலகின் ஏதோ ஒரு மூலையில் துப்பாக்கி வெடிக்கும். இரட்டைக் குழலிலிருந்து வெளிவந்த துப்பாக்கியின் மிச்சப்புகை அமெரிக்காவில் கசியும். இந்த விஷப்பாம்பு நுழையாத நாடுகளே இல்லை ” என்பதே அவை .
வல்லாதிக்கத்தின் கொடூரமான விரல்கள் அனைத்து நாடுகளின் மீதும் உள்ளது . அடிமைகளுக்கு தடவிக் கொடுத்தலும்  , அடங்க மறுப்பவர்களுக்கு கூரிய நகங்களால் பிராண்டுதலுமே அதன் தலையாய பணி. அப்பணியின் சூழ்ச்சிகரமான தீர்ப்பாகவே முர்ஸியின் மரண தண்டனையை பார்க்க முடியும் .
முர்சியின் பேச்சிலும் , எண்ணத்திலும் திடாகத்திரமான சிந்தனை ஓட்டம் ஒன்று உள்ளது. அதுவே ஃபலஸ்தீன். அவரது கண்கள்  அக்ஸாவை விடுதலைபெறவே கனவு காண்கிறது.  சிறைகளிலும் சிந்தனை மாறுமா என்ன ..???
நெஞ்சம்தனில் ஆழமான குடிகொண்டு, சுவாசம்தனில் இரண்டறக் கலந்த ஃபலஸ்தீனை மீட்டெடுக்கவே அவரது நகர்வுகள் அமைந்தன .

இறுதியா முர்ஸி உச்சரித்த எண்ண ஓட்டங்களை சமர்ப்பித்தல் சிறப்பானாதாக இருக்கும் .
“ஃபலஸ்தீனில் உரிமைகள் நிலைநாட்டப்படும்வரை எகிப்து அமைதியை முழுமையாய் தழுவாது “
:அஹ்மது யஹ்யா அய்யாஷ்
மின்னஞ்சல் : ahmed.joinislam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக