Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 6 மே, 2015

10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து பின் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் .

10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து பின் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் .
பெரம்பலூரில் நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நத்தை, நட்சத்திர மீன், கடல் குதிரை, டைனோசர் முட்டை ஆகியவற்றின் பாசில்களும், பழைய, புதிய கற்காலங்களில் பயன்படுத்திய கற்கருவிகள், சோழர்கால, சங்ககால, ஆங்கிலேயர் கால காசுகள், சோழர், பாண்டியர், நாயக்கர் கால கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், அரிய புகைப்படங்கள் கொண்ட மிகப் பெரிய புத்தகம் தயாராகிறது.

10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து பின் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் . இதனால் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் ஆகியவற்றின் பாசில்கள் எனப்படும் படிமங்கள் கிடைத்துள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய கற்காலம், புதிய கற்காலம், நுண்கருவிகள் காலம், இரும்பு காலம் எனப்படும் பெருங் கற்காலம் ஆகிய காலங்களைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 300 வரையுள்ள காலங்களைச் சேர்ந்தவை.
பெரம்பலூர், பெரும்பலூர் என்றே கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாறாக பெரும் புலியூர் என்றோ, இப்பகுதியில் புலிகள் வாழ்ந்ததாகவோ எந்த கல்வெட்டிலும் , நூல்களிலும் தெரிவிக்கப்படவில்லை.

இப்பகுதியில் நொச்சி மரங்கள் அதிகமிருந்த பகுதி நொச்சியம் என்றும், தொண்டமாந்துறை, திருமாந்துறை, திருவாளந்துறை என ஆற்றோரங்களில் இருந்த கிராமங்கள் துறைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து குல சேகர பாண்டியன், 3-ம் குலோந்துங்க சோழன், மராட்டிய சிவாசி, விசய நகரப் பேரரசு, போசளர், 3-ம் இராசராச சோழன், திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பீலி என்றால் மயிலைக் குறிக்கும்- இங்குள்ள பீல்வாடி கிராமம் மயில்கள் அதிகம் வாழ்ந்த பகுதியென்பதால் பீல்வாடி எனப்படுகிறது. சிறிய அகழியால் சூழப்பட்ட கிராமம் சித்தளி எனவும், பெரியஅகழி கொண்டபகுதி பேரளி எனவும் மருவி அழைக்கப்படுகிறது.

பெரம்பலூர் நகரம், கடல் சூழ்ந்த பகுதி, ரஞ்சன் குடி கோட்டை, கோயில்கள், ஆறுகள், மலைகள், ஊர்கள், இங்கு கண்டெடுக்கப் பட்ட அரிய பொருட்கள், அவற்றின் காலங்கள் என பெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறுகளும் உண்டு.
பெரம்பலூர் மாவட்டம் ,சென்னை --திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குக் கிழக்கே அமைந்துள்ளது சாத்தனூர் கிராமம். நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் இந்தியப் புவியியல் துறையால் பாதுகாக்கப்படும் கல் மரப்பூங்கா நம்மை ஆச்சரியமுற வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக