Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 16 மே, 2015

நக்பா – பலஸ்தீனின் துக்க தினம் ..!!

வரலாற்றில் இதே நாள் ..
1948 மே 15 முறைதவறி பிறந்த இஸ்ரேலின் பிறப்பு அமெரிக்காவின் அரக்கனால் உறுதி செய்யப்பட்ட தினம் .கொத்துக் கொத்தாக மண்ணின் மைந்தர்கள் விரட்டப்பட்டு , கொலை செய்யப்பட்டு அநியாயமாக புனித பூமியை அபகரித்துக் கொண்ட திட்டம்  அது . உலகமே கண்ணை பளீரென திறந்து வைத்த நேரத்திலேயே அத்தகைய கொடூரமான ஆதிக்கம் அமையப் பெற்றது .
“ஃபலஸ்தீனம் ” உணர்வுப்பூர்வமான உள்ளார்ந்த சகோதரத்துவம் ஒன்று சேரும் இடம் . பல தீர்க்க தரிசிகளையும்  , உயிர் தியாகிகளையும் தாங்கிய புனித பூமி.
ஆட்சிக்கும் , மக்களுக்கும் சூழ்ச்சி செய்து கலகத் தீ மூட்டி குளிர் காய்வதில் யூதர்கள் கைதேர்ந்தவர்கள் . கைதேர்ந்தவர்களின் கால்களும் சில நேரங்களில் சரிக்கி விழவே செய்யும் . யூதர்களின் சதிகள் அம்பலப்படுத்தப்பட்டு நாடோடிகளாகவும் , பஞ்சப் பராரிகளாகவும் சுற்றித் திரிந்த சூழ்ச்சிக்காரர்களுக்கு “எதிரிக்கு எதிரி நண்பன் ” என்ற கணக்கை வகுத்து குடியமர்த்தியது உலக ரவுடிகளின் தலைமை பீடமான அமெரிக்கா . இஸ்ரேல் அநியாயமாக ஆக்கிரமித்துக் கொண்டபோது நடந்த களேபரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல .
மண்ணை நேசித்த மைந்தர்களுக்கு  மரணத்தை பரிசாய் தந்தனர் பயங்கரவாதிகள் . என்றைக்கு இஸ்ரேலின் காலடி புனித பூமியில் பட்டதோ அன்றிலிருந்து ஆரம்பமானது அலறல்களும், ஓலங்களும் .

ஃபலஸ்தீனர்கள் வரலாறு நெடுக இப்படியொரு அசத்தியத்திற்கெதிரான பாரிய போராட்டத்தினை முன்னெடுத்திருக்கிறார்கள் , இஸ்ரேல் எம்மாத்திரம் .??? கல்லிலிருந்து துவங்கிய எதிர்ப்பு போர் …ஏவுகணை தொட்டு , பதுங்குகுழிகளிலும் போர் தந்திரம் பட்டையக் கிளப்புகிறது . இஸ்ரேல் நடுநடுங்கிப் போயுள்ளது . ஹமாஸ் இஸ்ரேலின் உள்ளங்களில் பூகம்பத்தை விதைத்து விட்டது . வழமையான கோளைத்தனத்தை இஸ்ரேலும் ,மொஸாதும் போர் தந்திரமாய் பாவித்து பிஞ்சுகளின் உயிரையும், உடலையும் ரசாயன குண்டுகளால் சீண்டி பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . இதனை படித்துக்கொண்டிருக்கும்போது கூட எத்தனை குண்டுகள் எத்தனை பிஞ்சுகளை துளைத்தனவோ என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை .தன் பிள்ளை வீரமரணம் அடைந்ததற்காய் முதிர்ச்சியான இதயத்தோடு இனிப்பு வழங்கி கொண்டாடிய தேசத்தில் இத்தகைய கொடூரங்களெல்லாம் ஈமானிய உறுதியை அதிகப்படுத்தவே செய்யும் .
நக்பா எனும் ஆக்கிரமிப்பு  நாளை ஃபலஸ்தீனர்கள் துக்க தினமாய் அனுஷ்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் . இஸ்ரேலோ பயம் கலந்த பீதியில் சுதந்திர தினமாய் கொண்டாடும் என்பதில் சந்தேகமுண்டோ ..???
சுதந்திர தினத்துக்கு விலங்கிட பலஸ்தீனர்கள் களமாட துவங்கிவிட்டனர் . உலகமும் முன்னெப்போதும் இல்லாத கூடுதல் கவனத்தை ஃபலஸ்தீனத்திற்கு அளித்து வருகிறது . மக்கள் ஒரு சேர ஹமாஸோடு கைகோர்த்திருக்கிறார்கள் .
இஸ்ரேலின் பூகம்பம் “யஹ்யா அய்யாஷ் ” விதைத்த விதை இஸ்ரேலின் நாடி நரம்புகளை ஆட்டம் காணச் செய்துள்ளன . அதன் வெற்றியே டெல் அவிவ் வரையிலான முன்னேற்றம் எனலாம்.

வெற்றி குறித்தும் ,எதிரிகளின் நிலை குறித்தும் நாம் ஓரளவு சிந்தித்தாலும் நயவஞ்சகர்கள் குறித்தும் கொஞ்சம் உற்று நோக்க வேண்டியிருக்கிறது .எகிப்தின் சீசியின் அட்டூழியங்கள் ஆத்திரமூட்டினாலும், துருக்கி எர்துகானின் துணிச்சலான நடவடிக்கைகள் ஆறுதலிக்கின்றன .
எப்படி ஃபலஸ்தீனர்களின் எண்ண ஓட்டம் இவ்வளவு மெய்சிலிர்க்க வைக்கிறது என்று இன்னமும் உலகம் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது . டெல் அவிவ் தாக்குதலில் தளபதியாக செயல்பட்டு வீரமரணம் அடைந்த  சஹீத் அஹமது ஜாஃப்ரியின் பேச்சினையும் ,செயல் வடிவத்தையும் பலஸ்தீனை நேசிக்கும் உள்ளங்கள் கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கிறது . ஜாஃப்ரி சொல்கிறார் “”எதிரிகள் வாழ்வின் மீது அதீத ஈடுபாடு காட்டுவதுபோல் , நாங்கள் மரணத்தின் மீது அதீத ஈடுபாடு காட்டும் சந்ததிகளை , மனிதர்களை உருவாக்குகிறோம் “” .
இவையே ஃபலஸ்தீனின் ஈமானிய உறுதிக்கான அடிப்படை .

ஃபலஸ்தீனர்களின் சுதந்திரத்தையும் , உயிரையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது . நம்மில் பலர் சஹாதத் குறித்து பேசிவருவதுண்டு . ஆனால் அதன் சுவையை, இனிமையை அனுபவித்தவர்களில் முக்கியமானவர்கள் ஃபலஸ்தீனர்கள் என்றால் அது மிகையல்ல .
உலகமே நக்பா குறித்து பேசி ஃபலஸ்தீனத்திற்கு ஆதரவான கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்க நாம் இன்னமும் கும்பா குறித்து பேசி சண்டையிட்டு , வழக்கு என தனிமைப்பட்டு மலிவான அரசியலில் சோறு பிசைந்து கொண்டிருக்கிறோம் .
இந்த தருணத்தில் ஹமாஸின் நிறுவனர் சஹீத் சேக் அஹமது யாசினின் சிந்தனைகள் நினைவுக்கு கொண்டு வருவது மிகப் பொருத்தமாக இருக்கும் .
“இஸ்ரேல் அநியாயத்தின் மீதுதான் எழுந்துள்ளது . எதுவெல்லாம் அநியாயத்தின் மீது எழுந்துள்ளதோ அதன் முடிவு அழிவுதான் “
இஸ்ரேலின் முடிவு அழிவுதான் ..!!
பலஸ்தீனம் நிச்சயம் வெல்லும் …
உள்ளங்களில் மட்டுமல்ல ..,
இவ்வுலகிலும் …!!!!

- அஹ்மது யஹ்யா அய்யாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக