Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 மே, 2015

இதுதான் மனித நீதி!

இதுதான் மனித நீதி!


நடுவீதியில் பசு ஒன்று மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தது...

எதிரில் வந்த யானை கேட்டது: ‘ஏன் என்ன ஆச்சு? எதற்காக இப்படிஅரக்கப் பரக்க ஓடுகின்றாய்?’
பசு மூச்சு வாங்கிக்கொண்டு சொன்னது: ‘நாட்டுல திரிகின்ற எருமை மாடுகளையெல்லாம் பிடித்து உள்ளே தள்ளும்படி அரசு ஆணையிட்டிருக்கின்றதாம்’
யானை வியப்புடன் வினவியது: ‘நீ தான் பசு ஆச்சே. எதற்காகப் பதற்றப்படுகின்றாய்?’
பசு சொன்னது: ‘அதெல்லாம் சரிதான். ஆனால் நான் எருமை இல்லை, பசுதான் என நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கே இருபது ஆண்டுகள் ஆகிவிடுமே’
இதனைக் கேட்டதும் யானை எடுத்தது பாருங்கள், ஓட்டம்!

3 கருத்துகள்:

  1. பெயரில்லா24 மே, 2015 அன்று AM 7:17

    அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு அன்பான வேண்டுகோல் நமதூரில்கடந்த வெள்ளிக்கிழமை புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்கப்பட்டது அதைப்பற்றி நமதூர் செய்தியில் ஒன்றும் போடவில்லை (நீங்கள் போடமாட்டீர்) அதனால் நமதூர் செய்தி பெயரை மாற்றி இன்று முதல் TNTJ NEWS என்று பெயர் மாற்றம் செய்வீர்கள் என்று நம்பும் லப்பைகுடிகாட்டான்

    பதிலளிநீக்கு
  2. தமிழ் நாட்டன் றுதல ஜமாth site is waste

    பதிலளிநீக்கு