Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 மே, 2015

ரூபாய் நோட்டிலிருந்தும் துரத்தப்படுகிறாரா காந்தி?


விஜயவாடா: மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத 10 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தற்போது இடம் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2ல் க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை துவக்கி விடுமுறையை நீக்கிய பாஜக அரசு, தற்போது ரூபாய் நோட்டிலிருந்தும் அவரை நீக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ஐதராபாத் ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கோவிந்தராவ் கூறுகையில், “இந்த நோட்டு விவகாரம் குறித்து மத்திய அலுவலகம் தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

இதனிடையே ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த வியாபாரி வெங்கடேஸ்வர ராவ் விஜயவாடாவில் உள்ள ஒரு பொருட்காட்சியில் 10 ரூபாய் நோட்டை ஒரு கடையில் பெற்ற போது அதில் காந்தி உருவப்படம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

அது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு உடனே அருகில் உள்ள ஸ்டேட் வங்கியை அணுகினார். வங்கி அதிகாரி அந்த நோட்டை சோதனையிட்ட போது அது உண்மையான நோட்டுதான் என உறுதி செய்தார்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “10 ரூபாய் நோட்டில் முதன் முதலாக காந்தி உருவப்படம் ஜூன் 1996-ம் ஆண்டுதான் இடம் பெற்றது. காந்தி உருவப்படம் இல்லாத இந்த நோட்டு அதற்கு முந்தைய காலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம்” என்றார்.

இந்த 10 ரூபாய் நோட்டு 1996-க்கு முன்னதாக அச்சடிக்கப்பட்டதா? அல்லது சமீபத்தில் வெளியிடப்பட்டதா? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2 ல் க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை துவக்கி விடுமுறையை நீக்கிய பாஜக அரசு, தற்போது ரூபாய் நோட்டிலிருந்தும் அவரை நீக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக