Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 மே, 2015

உம்ரா முடித்து திரும்பியவர்கள் அபுதாபி அருகே விபத்தில் 3 இந்தியர்கள் மரணம் 53 பேர் படுகாயம்!

அபுதாபி: துபாயை சார்ந்த இந்தியக் குழு ஒன்று சவுதி அரேபியாவில் உம்ராவை முடித்து விட்டு சனிக் கிழமை அமீரகத்தை நோக்கி பேருந்தில் திரும்பி கொண்டிருந்த போது அவர்கள் பயணம் செய்த பேருந்து அல் குவைஃபாத் – அபுதாபி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது இதில் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்
மேலும் 44 பேர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர் .
விபத்தில் இறந்த மற்றும் காயமுற்ற அனைவரும் உம்ரா செய்துவிட்டு திரும்பியவர்கள் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர உலோகத் தடுப்பில் மோதி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (16.05.2015) மாலை 3.30 மணியளவில் விபத்து நடந்த சிறிது நேரத்தில் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் ஆகாய மார்க்க மீட்புக் குழுவும் அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ்களும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று அவசர கால உதவிகளை மேற்கொண்டு காயமடைந்தோருக்கு அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையளித்து வருவதாக உள்துறை அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து துறை தலைவர் கலோனல் ஹமத் நஸீர் அல் பெலூசி தெரிவித்தார்.
ஓட்டுநரின் அதிக நேர வேலைப் பளுவின் அழுத்தமும் கவனக்குறைவும் பேருந்தின் டயர் வெடிப்புமே இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
கனரக வாகன ஓட்டிகள் கவனமாகவும், சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் மேலும் வேகக் கட்டுப்பாடுகளின் படியும் வாகனம் ஓட்ட வேண்டுமென கலோனல் அல் பெலூசி தெரிவித்தார். தரமான டயர்களையும் நெடுஞ்சாலைகளில் செல்லும் முன்பும் வாகனத்தின் டயர்களை பரிசோதித்து செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநரும் மரணமடைந்தார்.
உம்ரா முடித்தபின் அடுத்த மாதம் இந்தியா வருவதாகவும், தனக்கு பிறந்த 28 நாட்களேயான ஆண் குழந்தையை காண மிகவும் ஆவலாக உள்ளதாகவும் தனது நெருங்கிய உறவினர்களிடம் அவர் கூறியிருந்தார்.
38 வயதுடைய ஒட்டுநர் அப்துல் லத்திப் மற்றொரு ஓட்டுநரின் உதவியுடன் 10 நாட்கள் உம்ரா பயணம் சென்றுள்ளார். அமீரக எல்லையை அடைந்தவுடன் தனக்கு போன் செய்து மகிழ்சியை வெளிப்படுத்தியதாக 43 வயதுடைய நெருங்கிய நண்பரான முகம்மது அலி தெரிவித்தார்.
பின் அவர் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் தொழைபேசியில் அழைத்து தான் அடுத்த மாதம் தாயகம் சென்று தனது 28 நாட்களே ஆன குழந்தையை காண இருப்பதையும் நான் புதிதாக கட்டியுள்ள வீட்டில் குடியயேற்றம் மற்றும் விருந்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
லத்திப் மீண்டும் 25 நிமிடங்கள் கழித்து தனக்கு போன் செய்ததாகவும் தான் மெதுவாக வண்டி ஓட்டிவா எனக் கூறியதாகவும் அலி தெரிவித்தார் ஓட்டுநர் துபையைச் சார்ந்த ஒரு டிராவல்சில் பணிபுரிபவர் எனவும் அந்த டிராவல்ஸ் துபையில் வாழும் இந்தியாவின் கேரளாவைச் சார்ந்தவர்களுக்கு உம்ராவிற்கான ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டு ஓட்டுநர் உட்பட 60 பேர் பயணம் செய்த அந்த பேருந்தில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினரும் பயணம் செய்துள்ளனர் .
காயமடைந்த 53 பேரில் யாரும் ஆபத்தான கட்டத்தில் இல்லை என பாதிக்கப் பட்டோருக்கான உதவிகளை செய்துவரும் இந்திய சமூக சேவகரான கே.வி.செரீப் தெரிவித்தார்.
விபத்தில் பலியான இரண்டாமவர் 46 வயது நிறைந்த M.அபுபக்கர் உம்ரா பயணத்திற்கான கோ ஆர்டிேனேட்டர் ஆவார். இவர் மெசெஞ்சராக குடியுரிமை மற்றும் வெளிவிவகாரத்துறையில் 2007 முதல் பணி புரிந்துள்ளார்.
மரணமடைந்த மூன்றாமவர் 41 வயதுடைய கல்லரக்கள் முகமது இந்த வேராக் குழுவின் தலைவர் ஆவார். இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.இவர் X-ray டெக்னீசியனாக துபை ரஷீத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
இந்த குழு மே மாதம் 6ம் தேதி துபையில் இருந்து உம்ராவுக்கு புறப்பட்டது. விபத்து நிகழாமல் இருந்தால் சனிக்கிழமை மாலை துபாய் திரும்பியிருப்போம் என அபுபக்கர் தெரிவித்தார்.
மரணமடைந்தோரின் உடல்கள் மதினத்துள் ஜயாத் மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின் ஷேக் கலிஃபா மெடிக்கல் சிட்டிக்கு ஞாயிரு இரவு கொண்டு செல்லப் பட்டது.
அரசு நடைமுறைகள் முடிந்து விட்டால் திங்கள் கிழமை அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். காயமடைந்தோர் அல்மப்ராக் மற்றும் மதீனத் ஜயாத் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டனர். பெரும்பாலோனோர் ஞாயிறு மாலையே சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டனர். காயமுற்ற ஒரு வயது குழந்தை அல் அய்ன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக