Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 மே, 2015

டிவிட்டரில் வெறுப்பை கக்கிய பா.ஜ.க. தலைவர் மீது வழக்கு?

சமூக வலைளதங்களில் வெறுப்பை உமிழும் சங் பரிவார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ‘மூவாயிரம் முஸ்லிம்களை
கொலை செய்ய வேண்டும்’ என்று மே 2 அன்று டிவிட்டரில் அழைப்பு விடுத்தார் புனேயை சேர்ந்த அமிதேஷ் சிங் என்பவர். இவர் தன்னை புனே நகர் பாரதிய ஜனதா யுவ மோச்சாவின் துணை தலைவர் என்று தன்னுடைய டிவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். டிவிட்டரில் தன்னுடைய பெயருடன் பா.ஜ.க.வின் பெயரையும் இணைத்தே வைத்துள்ளார். டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடியும் அமிதேஷ் சிங்கை பின்தொடர்கிறார் என்பது கவனிக்கதக்கது.

இவரின் இந்த பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகமானதை தொடர்ந்து அமிதேஷ் சிங் தன்னுடைய டிவிட்டர் கணக்கை மே 3 அன்று அழித்து விட்டார்.
அமிதேஷ் சிங்கின் இந்த பதிவிற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நிலிம் தத்தா புனே கமிஷ்னரிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்டதாக கமிஷ்னர் அறிவித்ததை தொடர்ந்து அமிதேஷ் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக