Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 13 மே, 2015

தொலைக்காட்சி சானல்கள், இணையதளங்களை கண்காணிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: மத்தியில் ஆளும் மோடி அரசு, 600க்கும் அதிகமான தொலைக்காட்சி சானல்களையும், நான்கு கோடி இணையதளங்களையும் கண்காணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு ஊடகப் பிரிவு கண்காணிப்பை நடத்துவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறுகிறது.
பிரதமர் அலுவலகத்திற்கு இப்பிரிவு தினமும் 5 அறிக்கைகளை அளித்து வருகிறது. புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1395 அறிக்கைகள்
அளிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு சமூக வலை தளங்களில் வெளியாகும் தகவல்களில் பரிசோதனை துவங்கும். இந்தியா தொடர்பான 3 விஷயங்கள் முக்கியமாக பரிசோதிக்கப்படும்.சோசியல் மீடியா ட்ரண்டிங் ரிப்போர்டை தயாரித்து பிரதமர் அலுவலகத்திற்கு வழங்கப்படும். மாலை 6 மணிக்கும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும். சோசியல் மீடியாவை கண்காணித்து அறிக்கை அளிப்பதுதான் தங்களின் கடமை என்று புதிய ஊடக பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் மற்றும் கேபினட் செகரட்டரிக்கு தகவல் அறிக்கை அளிப்பதுதான் தங்களது கடமை என்றும் அவர் கூறினார்.
600க்கும் அதிகமான தொலைக்காட்சி சானல்களை கண்காணிப்பதற்காக 200 கண்டண்ட் எடிட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் சோசியல் மீடியாக்களை கண்காணிக்கின்றனர்.சோசியல் மீடியாவின் ட்ரண்டுகள் பொது சமூகத்தின் உணர்வை அடையாளப்படுத்துவதாக செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் கருதுகிறது.
கட்டாய மதமாற்றம், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை, ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்த பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களில் சோசியல் மீடியாவின் ட்ரண்டை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தலையிட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிறப்பு ஊடகப் பிரிவு துவக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் இதன் பலம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக